கண்ணாடியை திருப்புனா மட்டும் ஆட்டோ ஓடுமா? பாகிஸ்தான் அணியை கலாய்த்து தள்ளும் – கிரிக்கெட் ரசிகர்கள்

PAK
- Advertisement -

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது கடந்த 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக உலகில் நம்பர் 1 அணியாக உச்சத்தில் இருந்தது. அந்த நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்திய அவர்கள் ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட பலமான ஒரு அணியாகவும் பாகிஸ்தான் அணி இருந்தது.

இதன் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் 9 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

- Advertisement -

இப்படி பலமான அணியாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி இப்படி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதோடு பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்வியின் எதிரொலியாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

அதனை தொடர்ந்து கடந்து சில மாதங்களாகவே அந்த அணியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து பயிற்சியாளர் குழு வரை அனைத்துமே அதிரடியாக மாற்றப்பட்டது. இந்நிலையில் புதிதாக பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டன் பதவியை ஷாஹீன் அப்ரிடியும், டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூதும் பதவி ஏற்றனர்.

- Advertisement -

இப்படி அடுத்தடுத்து நடைபெற்ற மாற்றங்களால் பாகிஸ்தான் அணி முன்னேற்றத்தைக் காணும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி படு தோல்வியை சந்தித்தது. அதேபோன்று தற்போது நியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் நான்கு ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியுள்ளது.

இதையும் படிங்க : இன்னமும் அந்த தோல்வியில் இருந்து நான் வெளிய வரல.. எனக்கு அந்த கப் ரொம்ப முக்கியம் – ரோஹித் சர்மா வருத்தம்

கேப்டன் மாற்றம் நிகழ்ந்தால் ஆவது பாகிஸ்தான் அணி முன்னேற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கேப்டனை மாற்றினால் மட்டும் நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்களா? கிரிக்கெட்டில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டுமெனில் தரமான அணியும், நல்ல வீரர்களும் தேவை என்று ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை சமூகவலைதளத்தில் தொடர்ச்சியாக கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement