அதுக்கான நேரம் வந்தாச்சு.. ரோஹித், விராட் கோலியிடம் தெளிவா சொல்லிடுங்க.. பிசிசிஐக்கு ஹர்பஜன் கோரிக்கை

Harbhajan Singh 33
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான பயணத்தை துவங்கியுள்ளது. ஆனால் அந்த பயணத்தில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய நட்சத்திர சீனியர் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடுவார்களா சந்தேகமும் குழப்பமும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய அவர்கள் அடுத்ததாக நடைபெறும் தென்னாபிரிக்க தொடர் உட்பட கடந்த ஒரு வருடமாக மேற்கொண்டு ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. மேலும் 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு ரோகித் சர்மா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர்களின் சுமாரான செயல்பாடுகள் முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

சொல்லிட்டு செய்ங்க:
அதனால் அவர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய வீரர்களை கொண்ட இளம் அணியை களமிறக்கும் வேலையை பிசிசிஐ ஏற்கனவே கையிலெடுத்துள்ளது. இந்நிலையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினால் அதைப்பற்றி விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிடம் நேரடியாக தெளிவாக சொல்லி விட வேண்டும் என்று பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவுக்கு ஹர்பஜன் சிங் கோரிக்கை வைத்துள்ளார்

மேலும் டி20 கிரிக்கெட்டில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நேரம் வந்துள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்போர்ட்ஸ் டக் பேட்டியில் பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக விளையாடியது. எனவே இது வருங்காலத்தைப் பற்றிய சிந்திக்க வேண்டிய நேரம் என்று நான் நம்புகிறேன்”

- Advertisement -

“விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பெரிய பெயர்களை கொண்ட வீரர்கள் என்பதால் அவர்களிடம் நாம் வார்த்தை நடத்த வேண்டும். நாம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினால் அவர்களை 2024 டி20 உலகக் கோப்பைக்கு இப்போதிலிருந்தே தயார் செய்ய வேண்டும். அதே சமயம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தங்களுடைய டி20 கேரியரை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும்”

இதையும் படிங்க: ஓப்பனிங்கில் கில் வேண்டாம்.. தெ.ஆ டி20 தொடரில் பேட்டிங் வரிசை பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர் ஆலோசனை

“அதை பிசிசிஐ சேர்மேன் மற்றும் தேர்வுக் குழுவினர் செய்ய வேண்டும்” என்று கூறினார். இருப்பினும் 2023 உலகக் கோப்பையில் கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களை விட விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தான் அதிக ரன்கள் குவித்து உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு போராடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement