ஓப்பனிங்கில் கில் வேண்டாம்.. தெ.ஆ டி20 தொடரில் பேட்டிங் வரிசை பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர் ஆலோசனை

Sanjay Manjrekar
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு பறந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் டிசம்பர் 10ஆம் தேதி துவங்குகிறது.

அதில் ரோகித் சர்மா, பும்ரா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுக்கு அதிகமான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஓய்வெடுத்த சுப்மன் கில் இத்தொடரில் விளையாட உள்ளதால் ஓப்பனிங் ஜோடியில் களமிறங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

ஓப்பனிங்கில் கில் வேண்டாம்:
இந்நிலையில் ஆஸ்திரேலிய டி20 தொடரில் இந்தியா வெற்றிக்கு காண்பதற்கு உதவிய ருதுராஜ் – ஜெய்ஸ்வால் ஜோடி தென்னாப்பிரிக்க தொடரிலும் துவக்க வீரர்களாக களமிறங்கலாம் என்று முன்னாள் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். அதாவது கடந்த தொடரில் விளையாடிய ஓப்பனிங் ஜோடியை பிரிக்க வேண்டாம் என்று தெரிவிக்கும் அவர் கில் 3வது இடத்தில் விளையாடலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இந்த டி20 தொடருக்கான இந்திய பேட்டிங் வரிசை பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கேம் ப்ளான் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் – ருதுராஜ் ஓப்பனிங் ஜோடியை தொல்லை செய்வதற்கு இந்திய அணி நிர்வாகம் நினைக்குமா? ஏனெனில் சுப்மன் கில் துவக்க வீரராக விளையாடிய ரெக்கார்டை கொண்டுள்ளார். ஆனால் என்னைப் பொறுத்த வரை ஜெய்ஸ்வால் – ருதுராஜ் துவக்க வீரர்களாகவும் கில் 3வது இடத்திலும் விளையாடலாம்”

- Advertisement -

“அவர்களைத் தொடர்ந்து 4வது இடத்தில் சூரியகுமார் யாதவை நான் தேர்ந்தெடுப்பேன். அதை தொடர்ந்து உங்களுக்கு திலக் வர்மா, ரிங்கு சிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உங்களுடைய பேட்டிங் வரிசையில் இருப்பார்கள். இவர்களைக் கொண்ட பேட்டிங் வரிசை மிகச் சிறந்த ஆழத்தை கொண்டுள்ளது. ஆனால் இந்த வீரர்களை தேர்வு செய்தால் உங்களால் எப்படி இஷான் கிஷானை கொண்டு வர முடியும் என்பது எனக்கே தெரியவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: சுந்தரை மறந்துடாதீங்க.. தெ.ஆ டி20 தொடரின் பவுலிங் வரிசை பற்றி இர்பான் பதான் பேட்டி

இருப்பினும் சமீபத்திய டி20 போட்டிகளில் இஷான் கிசான் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார். அதனால் ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கும் வாய்ப்புள்ளது. அந்த வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி டர்பன் நகரில் துவங்க உள்ளது. அதில் வெற்றி காண்பதற்காக இந்திய அணியினர் பயிற்சிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement