சுந்தரை மறந்துடாதீங்க.. தெ.ஆ டி20 தொடரின் பவுலிங் வரிசை பற்றி இர்பான் பதான் பேட்டி

Irfan Pathan 5
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிவதற்காக நடைபெறும் இத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூரியகுமார் யாதர் தலைமையில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி பெறுவதற்கு உதவிய ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் மீண்டும் விளையாடுவதற்கு வாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஆஸ்திரேலிய டி20 தொடரில் கடைசி வரை வாய்ப்பு பெறாத வாஷிங்டன் சுந்தர் போன்ற சில வீரர்கள் இந்த தொடரிலாவது வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

பவுலிங் வரிசை:
இந்நிலையில் சமீப காலங்களாக காயத்தை சந்தித்து விளையாடாமல் இருந்து வரும் தீபக் சஹருக்கு பதிலாக இத்தொடரில் முகமது சிராஜ் விளையாடுவது சரியான தேர்வாக இருக்கும் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். மேலும் சுழல் பந்து வீச்சு துறையில் வாஷிங்டன் சுந்தரை மறந்து விடாதீர்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கேம் ப்ளான் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

“உங்களுக்கு 3 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. அதில் முகேஷ் குமார், அர்ஷிதீப் சிங் கண்டிப்பாக இருப்பார்கள். 3வது இடத்திற்கு தீபக் சஹார் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் போட்டியிடலாம். அதில் முகமது சிராஜ் மிகச் சிறப்பாக செயல்படலாம். குறிப்பாக ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவருக்கு ஏன் டி20 கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியான வாய்ப்பு கொடுக்கக் கூடாது? அவர் புதிய பந்தில் சில நல்ல ஓவர்களையும் யார்கர் பந்துகளையும் வீசும் திறமையை கொண்டவர்”

- Advertisement -

“மறுபுறம் தீபக் சஹர் மீண்டும் அணிக்கு வந்தாலும் சமீபத்தில் நிறைய காயங்களை அடிக்கடி சந்தித்தார். எனவே அணியின் நலனுக்காக நீண்ட கால திட்டத்தை கருத்தில் கொள்ளும் போது நீங்கள் ஃபிட்டாக இருக்கும் வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதனால் அந்த 3 வீரர்களும் வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள். அதை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா இருப்பார். அதே சமயம் வாஷிங்டன் சுந்தரை மறந்து விடாதீர்கள்”

இதையும் படிங்க: சுந்தரை மறந்துடாதீங்க.. தெ.ஆ டி20 தொடரின் பவுலிங் வரிசை பற்றி இர்பான் பதான் பேட்டி

“புதிய பந்தில் பயனை ஏற்படுத்தும் வகையில் பந்தை வீசக்கூடிய அவர் எதிரணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தால் உங்களுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்துவார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் முதல் போட்டி வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் சவாலான தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு வெல்வதற்கு இந்தியா தயாராகி வருகிறது.

Advertisement