ஏற்கனவே நாம 2 வருஷம் பின்னாடி போய்ட்டோம், 350 ரன்கள் அடிக்கனும்னா அவரை கழற்றி விடுங்க – சபா கரீம் அதிரடி

Karim
- Advertisement -

2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை சமீபத்திய டி20 உலக கோப்பையில் சந்தித்த தோல்விக்குப் பின் நியூசிலாந்தில் துவங்கிய இந்தியா மழைக்கு களமிறங்கிய ஒருநாள் தொடரில் மத்தியில் 1 – 0 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதை தொடர்ந்து வங்கதேசத்தில் விளையாடிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டாலும் கடைசி போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று தக்க பதிலடி கொடுத்து வைட்வாஷ் தோல்வியை தவிர்த்தது.

IShan Kishan Virat Kohli

- Advertisement -

அப்போட்டியில் காயமடைந்த கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பதில் வாய்ப்பு பெற்ற இசான் கிசான் 290 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இரட்டை சதமடித்து 210 (131) ரன்களும் விராட் கோலி சதமடித்து 113 (91) ரன்களும் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் உட்பட நிறைய சாதனைகளை படைத்த இஷான் கிசான் இன்னும் கொஞ்சம் நின்றிருந்தால் 300 ரன்கள் அடித்திருப்பேன் என்று தன்னம்பிக்கையுடன் பேசியது அனைவரும் பாராட்டுகளை பெற்றது.

பின்னாடி இருக்கோம்:

அதை விட வங்கதேசத்துக்கு கருணை காட்டாமல் அடித்து நொறுக்கிய அவரது பேட்டிங்கை பார்க்கும் ரசிகர்கள் 2023 உலகக்கோப்பையில் அவரைப் போன்ற அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கோரிக்கை வைக்கிறார்கள். ஏனெனில் தரமும் தகுதியும் திறமையும் இருந்தும் சமீப காலங்களில் நட்சத்திர அந்தஸ்து அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் தடவலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.

Dhawan

அதனால் அதிரடி அணுகு முறையுடன் விளையாடும் இளம் கிரிக்கெட் வீரர்கள் தேவைப்படும் இந்த சமயத்தில் ஒரு கட்டத்தில் மிஸ்டர் ஐசிசி என்று பெயரெடுக்கும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டாலும் சமீப காலங்களில் வயது காரணமாக தடுமாறும் சீனியர் வீரர் ஷிகர் தவானை கழற்றி விட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இருப்பினும் அனுபவமிக்க அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வாசிம் ஜாஃபர் போன்ற முன்னாள் வீரர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து போன்ற அணிகள் முன்னோக்கி நடைபெறும் நிலையில் இந்தியா 2 வருடங்கள் பின்னோக்கி இருப்பதாக தெரிவிக்க முன்னாள் வீரர் சபா கரீம் ஷிகர் தவானை வைத்துக்கொண்டு 275 ரன்கள் அடிக்க முடியுமே தவிர 350 ரன்களை அடிக்க முடியாது என்று கூறியுள்ளார். அதனால் அவருக்கு இந்திய அணியில் இடமில்லை என்று அதிரடியாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Karim

“இவை அனைத்தும் எந்த வகையான கிரிக்கெட்டை நாம் விளையாட வேண்டும் என்ற அணி நிர்வாகத்தின் அணுகு முறையை பொறுத்தது. ஒருவேளை அணி நிர்வாகம் 275 – 300 ரன்கள் எடுத்தால் போதும் என்று நினைத்தால் சிகர் தவானை தொடரலாம். ஏனெனில் அவர் அதை எடுக்கும் திறமையுடையவர். இந்த தொடரில் அவர் ரன்கள் அடிக்கவில்லை என்பது வேறு கதை. ஆனால் மீண்டும் நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் அவர் 275 – 300 ரன்கள் எடுக்கும் அளவுக்கு மட்டுமே செயல்பட்டு உலகக்கோப்பை வரை விளையாட முடியும். ஆனால் நீங்கள் உங்களுடைய அடிப்படை ஸ்கோர் 325 – 350 ரன்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் ஷிகர் தவானுக்கு அணியில் இடமில்லை”

இதையும் படிங்க: வீடியோ : நீங்க என்ன ஆடுறீங்க? எங்களை பாருங்க. ஆண்கள் அணியை காட்டிலும் பெண்கள் அணி பெற்ற – உலக சாதனை வெற்றி

“நான் பேசுவதை விட இவை அனைத்தும் தேர்வுக்குழு, அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் ஆகியோர் என்னை எதிர்பார்க்கிறார்கள் என்பதில் தான் உள்ளது. ஒருவேளை நீங்கள் 130 – 140 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 350 ரன்களை எடுக்க உதவும் அளவுக்கு ஷிகர் தவானால் விளையாட முடியும் என்று நினைத்தால் அது நிச்சயம் நடைபெறாது. வருங்காலங்களில் நாம் நிறைய சாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சொல்லப்போனால் நாம் ஏற்கனவே வெள்ளை பந்து கிரிக்கெட்டில் 2 – 3 வருடங்கள் பின்தங்கியுள்ளதாக நான் கருதுகிறேன். எனவே நமக்கு இப்போது இசான் கிசான், சூரியகுமார் யாதவ், பிரிதிவி ஷா, ருதுராஜ் கைக்வாட், சுப்மன் கில் போன்ற புதிய வீரர்கள் தான் தேவைப்படுகிறார்கள்” என்று கூறினார்.

Advertisement