தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால் இந்திய அணி சந்திக்கவுள்ள நிலை – புள்ளி பட்டியலில் ஏற்படவுள்ள மாற்றம்

IND-vs-RSA
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் 13-வது 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது முதல் வாரத்தினை கடந்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 14 போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளன. அதனை தொடர்ந்து இந்த நடப்பு உலகக் கோப்பை தொடரின் 15-ஆவது லீக் போட்டியானது இன்று தர்மசாலா நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதனால் ஒவ்வொரு போட்டியுமே முக்கியமான ஆட்டமாக பார்க்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 1.821 என்கிற ரன் ரேட்டுடன் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அவர்களை தொடர்ந்து நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 1.604 என்கிற ரன் ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அவர்களை தொடர்ந்து தென்னாபிரிக்க அணி மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி நான்காவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் நெதர்லாந்து அணியை தென்னாபிரிக்க அணி எளிதில் வீழ்த்தினாலே புள்ளி பட்டியலில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஆம் அந்த வகையில் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியை சாதாரணமாக வீழ்த்தினால் கூட ஏற்கனவே 4 புள்ளிகளுடன் 2.360 என்கிற ரன் ரேட்டில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா அணி நல்ல ரன் ரேட்டுடன் 6 புள்ளிகளை பெற்று இந்திய அணியை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதல் இடத்தை பிடிக்கும்.

இதையும் படிங்க : நீங்க செய்த தவறுக்கு கண்டிப்பா உங்களுக்கு அந்த தண்டனை கிடைக்கும். வார்னரை எச்சிரித்த – சைமன் டவுள்

உலகக்கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அல்லது நியூசிலாந்து அணியே அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று பலரும் கூறி வந்த வேளையில் தென் ஆப்பிரிக்க அணியானது இந்த தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல ரன் ரேட்டுடன் தொடர்ச்சியாக சிறப்பாக பயணித்து வருவதால் அவர்களும் அரையிறுதிக்கான கடுமையான போட்டியாளராக இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Advertisement