IPL 2023 : அவரது கேப்டன்ஷிப் பற்றி தெரிஞ்சுக்கணும், மும்பை இல்லாமல் போனால் அந்த ஐபிஎல் டீம்ல விளையாட ஆசை – சுனில் கவாஸ்கர்

sunil-gavaskar
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் 31 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி கோடைகாலத்தில் பரபரப்பான போட்டிகளுடன் இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. கடந்த 2008இல் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் தரத்திலும் பணத்திலும் பல பரிணாமங்களை கடந்து இன்று சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த தொடரில் உலகம் முழுவதிலும் உள்ள நட்சத்திர வீரர்கள் தங்களது மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து கோடிகளை சம்பாதித்து வருகிறார்கள்.

SUnil Gavaskar Kapil Dev

- Advertisement -

ஆனாலும் கூட 2008இல் துவங்கப்பட்ட இந்த தொடரில் சச்சின், கங்குலி போன்ற மகத்தான வீரர்கள் தங்களுடைய கேரியரின் கடைசி காலங்களில் விளையாடும் வாய்ப்பை மட்டுமே பெற்றனர். அதே போல அதற்கு முன்பிருந்த கபில் தேவ், சுனில் கவாஸ்கர் போன்ற இந்திய ஜாம்பவான்கள் ஐபிஎல் தொடரில் வரணையாளர்களாக செயல்படும் வாய்ப்பை மட்டுமே பெற்றுள்ளனர். ஒருவேளை அவர்கள் இப்போது விளையாடியிருந்தால் கோடிகளை சம்பளமாக பெற்று தங்களது சிறந்த திறமைகளால் ரசிகர்களை மகிழ்வித்திருப்பார்கள்.

கவாஸ்கரின் ஆசை:
குறிப்பாக உலகிலேயே 10000 டெஸ்ட் ரன்களை அடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்த சுனில் கவாஸ்கர் அந்த காலத்திலேயே வெறித்தனமான வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை ஹெல்மெட் போடாமலேயே மிகச் சிறப்பாக எதிர்கொண்ட பெருமைக்குரியவர். அந்த காலத்தில் ஒரு உலகக் கோப்பை போட்டியில் ஆமையை போல் மெதுவாக விளையாடியிருந்தாலும் கூட இந்த காலத்தில் விளையாடியினால் நிச்சயம் அதற்கேற்றார் போல் தன்னை மாற்றி வேகமாக விளையாடும் கிளாஸ் நிறைந்த ஜாம்பவான் வீரரான அவர் ஒருவேளை தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடினால் தாம் பிறந்து வளர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட விரும்புவதாக கூறியுள்ளார்.

Sunil Gavaskar

அத்துடன் தமது காலத்தில் இருந்த கபில் தேவ், பிஎஸ் சந்திரசேகர், சந்தீப் பாட்டில் ஆகியோர் நவீன டி20 கிரிக்கெட்டில் அசத்தும் அளவுக்கு அப்போதே திறமை கொண்டிருந்ததாக தெரிவிக்கும் கவாஸ்கர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அப்போது விளையாடிய பேட்ஸ்மேன்களில் சந்தீப் பாட்டில் இப்போதைய டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். அதே போல ஆல் ரண்டர்களில் கபில் தேவ் மற்றும் பவுலர்களில் பிஎஸ் சந்திரசேகர் ஆகியோரை நான் டி20 கிரிக்கெட்டில் விளையாட தேர்வு செய்வேன். ஏனெனில் அவருடைய பவுலிங் ஆக்சன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டுமில்லாமல் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியை தவிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட விரும்புவதாகவும் கவாஸ்கர் தெரிவித்தார். ஏனெனில் மிகச் சிறந்த கேப்டனாக போற்றப்படும் எம்எஸ் தோனியை இதுவரை அருகில் இருந்து பார்த்ததில்லை என்பதால் சென்னை அணியில் விளையாடி அவருடைய கேப்டன்ஷிப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

Sunil-Gavaskar

“நிச்சயமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட விரும்புவேன். ஒருவேளை அந்த அணியில் இல்லையென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட விரும்புவேன். நான் சென்னை அணியில் விளையாட விரும்புவதற்கு 2 காரணங்கள் உள்ளது. முதலில் அந்த அணியின் உரிமையாளர் இந்த கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வத்துடன் இருந்து அதற்காம முன்னேறதிற்கு நிறையவற்றை செய்துள்ளார். கிரிக்கெட்டுகாக ஸ்ரீனிவாசன் அவர்கள் நிறைய செய்துள்ளார்”

இதையும் படிங்க:IPL 2023 : சுயநலமின்றி விளையாடும் அவரை பாருங்க, அந்த இடத்துல ஏன் பெட்டி பாம்பா அடங்குறீங்க – விராட் கோலியை விமர்சித்த மஞ்ரேக்கர்

“மற்றொரு மிகப்பெரிய காரணம் என்னவெனில் நான் எம்எஸ் தோனியுடன் உடைமாற்றும் அறையில் இருந்து அவர் எவ்வாறு தன்னுடைய அணியை கேப்டன்ஷிப் செய்கிறார் என்பதை பார்க்க விரும்புகிறேன். குறிப்பாக களத்தில் இருப்பது போலவே அவர் அங்கேயும் கூலாக இருப்பாரா அல்லது கேட்ச் விடும் போது கோபப்படுவதைப் போல் நடந்து கொள்வாரா என்பதை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement