பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக நாங்கள் அடைந்த தோல்விக்கு இதுதான் காரணம் – சஞ்சு சாம்சன் வருத்தம்

Samson
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 65-ஆவது லீக் போட்டியானது நேற்று கவுஹாத்தி நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ரியான் பராக் 48 ரன்களையும், அஸ்வின் 28 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெளியேறிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக சாம் கரண் 63 ரன்களையும், ஜிதேஷ் ஷர்மா 22 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : இன்னும் இந்த போட்டியில் நாங்கள் கூடுதல் ரன்களை குவித்திருக்க வேண்டும். நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். இந்த மைதானத்தில் 160 ரன்கள் வெற்றிக்கு போதுமான இலக்காக இருந்திருக்கும்.

- Advertisement -

இருந்தாலும் எங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் இந்த இலக்கை வைத்து சிறப்பாக போராடினார்கள். உண்மையில் எங்கள் அணியில் ஐந்து தரமான பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். கடைசி நான்கு போட்டிகளாக நாங்கள் வரிசையாக தோற்றுள்ளோம்.

இதையும் படிங்க : ராஜஸ்தான் தோல்வியால் ஸ்ரேயாஸ் ஐயர் அபார சாதனை.. கங்குலி, யுவிக்கு நிகராக சாம் கரண் வரலாற்று சாதனை

இந்த தவறு எங்கு நடந்தது என்று கண்டறிந்து அந்த இடத்தினை பலப்படுத்த வேண்டியது அவசியம். அனைவருமே சிறப்பான வீரர்கள் தான் ஆனாலும் சரியான பங்களிப்பை வழங்க வேண்டியதும் அவசியம். இனிவரும் போட்டிகளில் நிச்சயம் நாங்கள் பலமாக திரும்புவோம் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement