CWC 2023 : அவர் மட்டும் கடைசி வரை ஃபிட்டா இருந்தா.. இந்தியாவை யாரும் தடுக்க முடியாது.. இர்பான் பதான்

Irfan Pathan
- Advertisement -

ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வெற்றி பயணத்தை துவங்கியுள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 200 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித், இசான் கிசான், ஸ்ரேயாஸ் ஆகிய 3 வீரர்கள் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 2/3 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மிடில் ஆர்டரில் விராட் கோலி 85 ரன்கள் ராகுல் 97* ரன்களும் அடுத்து அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். முன்னதாக அப்போட்டியில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்ததை போலவே நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

பதான் நம்பிக்கை:
குறிப்பாக துவக்க வீரர் மிட்சேல் மார்ஷை டக் அவுட்டாக்கிய அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு ஆஸ்திரேலிய துவக்க வீரரை டக் டவுட் செய்த முதல் இந்திய பவுலர் என்ற தனித்துவமான சாதனையும் படைத்தார். கடந்த வருடம் சந்தித்த காயத்தால் ஆரம்பத்தில் விளையாடுவாரா என்று சந்தேகிக்கப்பட்ட அவர் தக்க சமயத்தில் குணமடைந்து 2023 ஆசிய கோப்பையில் அபாரமாக செயல்பட்டு முழுமையான ஃபார்முக்கு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருவது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் பும்ரா மட்டும் முழுமையாக ஃபிட்டாக இருந்து இத்தொடரில் முழுவதுமாக விளையாடினால் இந்தியா கோப்பையை வெல்வதை வேறு அணிகளால் தடுக்க முடியாது என்று இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நிச்சயமாக அவரை விட சிறந்த பவுலர் உங்களிடம் இருக்க முடியாது”

- Advertisement -

“பும்ராவை விட அதிக அனுபவமிக்க பவுலரும் உங்களுக்கு கிடைக்க மாட்டார்கள். நல்ல ஃபார்மில் இருக்கும் அவருக்கு இந்தியாவில் உள்ள பிட்ச்கள், சூழ்நிலைகள் நன்றாக தெரியும் என்பதால் அதற்கேற்றார் போல் தம்மை எப்படி அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்பதும் தெரியும். அப்போட்டியில் அவர் மார்ஷை செட்டிங் செய்து அவுட்டாக்கிய விதம் சிறப்பாக இருந்தது”

இதையும் படிங்க: வீடியோ : 1 பந்தில் 13 ரன்கள்.. அசாத்தியமற்றதை அசால்ட்டாக அடித்த சான்ட்னர்.. ரசிகர்கள் வியப்பு

“குறிப்பாக அதற்கு முன்பு வரை இன்ஸ்விங் பந்துகளை வீசிய அவர் திடீரென அந்தப் பந்தை அவுட் ஸ்விங்கர் போல காண்பித்து நேராக வீசினார். அந்த கேட்ச்சை விராட் கோலி சிறப்பாக பிடித்தார். மேலும் பும்ரா பந்து வீசிய விதத்திற்கு இந்த உலகக் கோப்பை முழுவதும் ஃபிட்டாக இருந்தால் வேறு எந்த அணியும் நாம் கோப்பையை வெல்வதை தடுத்து நிறுத்த முடியாது” என்று கூறினார். முன்னதாக பும்ரா இல்லாதது 2022 டி20 உலக கோப்பை மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவின் தோல்விக்கு மறைமுக காரணமானது குறிப்பிடத்தக்கது.

Advertisement