1 பந்தில் 13 ரன்கள்.. அசாத்தியமற்றதை அசால்ட்டாக அடித்த சான்ட்னர்.. ரசிகர்கள் வியப்பு

Mitchell Santner 2
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற்ற 6வது லீக் போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் அதிரடியாக விளையாடி 322/7 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக வில் எங் 70, ரச்சின் ரவிந்த்ரா 51, கேப்டன் டாம் லாதம் 53 ரன்கள் எடுக்க நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக ஆர்யன் தத், வேன் டெர் மெர்வி, வேன் மீக்ரம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 323 ரன்களை துரத்திய நெதர்லாந்து முடிந்தளவுக்கு போராடியும் 46.3 ஓவரில் 233 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

1 பந்தில் 13 ரன்கள்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக கோலின் ஆக்கர்மேன் 69 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். சொல்லப்போனால் இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் நியூசிலாந்து சுழல் பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்த அவர் பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் 36 ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

அதை விட 49வது ஓவரில் களமிறங்கிய அவர் பஸ் டீ லீடி வீசிய 50வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்டார் அப்போது நியூசிலாந்தின் ஸ்கோர் 309/7 ரன்களாக இருந்த நிலையில் டீ லீடி கடைசி பந்தை லோ ஃபுல் டாஸாக வீச முயற்சித்து தவறுதலாக இடுப்புக்கு மேலே வீசினார். ஆனால் கிட்டத்தட்ட ஒய்ட் போல இடுப்புக்கு மேலே ஆப் சைட் திசையில் வந்த அந்த பந்தை விடாத சான்ட்னர் அப்படியே தாவி அட்டகாசமான சிக்ஸராக அடித்தார்.

- Advertisement -

அதன் காரணமாக நடுவர் அந்த பந்தை நோ பால் வழங்கி ப்ரீ ஹீட் கொடுத்தார். அதை தொடர்ந்து மீண்டும் வீசப்பட்ட பந்தில் புல் டாஸை பயன்படுத்தி அதிரடியாக மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் அடித்த சான்ட்னர் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அந்த வகையில் ஒரே பந்தில் நோபால் உட்பட அவர் 2 சிக்சருடன் 13 ரன்கள் என்ற அசாத்தியமற்ற ரன்களை அசால்டாக அடித்து நியூஸிலாந்து 322/7 ரன்கள் எடுக்க உதவினார்.

முன்னதாக ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அவர் பெற்றுக் கொடுத்த வெற்றியை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இந்த வகையில் இந்த போட்டியில் அவர் அசத்திய மொத்தம் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 36* (17) ரன்கள் அடித்து நியூசிலாந்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement