குறை சொல்லல.. ஃபைனலில் இந்திய பவுலர்களுக்கு அது கிடைச்சுருந்தா ஜெயிச்சுருப்போம்.. ஷமி ஏமாற்ற பேட்டி

Shami Press 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஃபைனல் போட்டியில் பேட்டிங்கில் சுமாராக விளையாடிய 240 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்வியை கொடுத்தது. குறிப்பாக டாஸ் வென்று முதலில் பந்து வீசிய ஆஸ்திரேலியா மிகச் சிறப்பாக செயல்பட்டு ஃபீல்டிங் துறையில் இந்திய பேட்ஸ்மேன்களை மடக்கி பிடித்து 6வது முறையாக கோப்பையை வென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது.

அதனால் சொந்த மண்ணிலாவது கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது. இந்த தோல்விக்கு கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி அவுட்டானதே முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

ஷமி ஆதங்கம்:
ஒருவேளை அவர்கள் கணிசமான ரன்கள் எடுத்திருந்தால் கூட இந்தியா எக்ஸ்ட்ரா 30 ரன்கள் எடுத்து இன்னும் சற்று அதிகமாக வெற்றிக்கு போராடியிருக்கும். ஏனெனில் பொதுவாக 300 ரன்களை கூட கட்டுப்படுத்துவதற்கே இந்திய பவுலர்கள் திண்டாடுவார்கள். ஆனால் இந்த உலகக் கோப்பையில் ஷமி, பும்ரா, குல்தீப் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 230 ரன்களை வைத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

அதனால் ஃபைனலில் 240 ரன்களை இந்தியா கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்றார் போல் பும்ரா 2, ஷமி 1 விக்கெட்டுகளை எடுத்து ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவை 41/3 என மடக்கி பிடித்தனர். ஆனாலும் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத அளவுக்கு டிராவிஸ் ஹெட் – லபுஸ்ஷேன் ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தார்கள்.

- Advertisement -

இந்நிலையில் ஃபைனலில் பேட்ஸ்மேன்கள் சற்று சிறப்பாக விளையாடி 300 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தால் கூட பவுலர்கள் இன்னும் சற்று போராடி இந்தியாவை வெற்றி பெற வைத்திருப்பார்கள் என்று ஷமி தெரிவித்துள்ளார். இருப்பினும் இதை சாக்காக அல்லது யாரையும் குறை சொல்வதற்காக சொல்லவில்லை என்று தெரிவிக்கும் அவர் தம்முடைய ஆதங்கத்தை பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: தமிழக வீரருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்.. டாசுக்கு பிறகு சூரியகுமார் யாதவ் எடுத்த அதிரடி முடிவு – விவரம் இதோ

“நாங்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை. குறிப்பாக 300 ரன்கள் எடுத்திருந்தால் அதை நாங்கள் எளிதாக கட்டுப்படுத்திருப்போம். இருப்பினும் அது போன்ற குறிப்பிட்ட அம்சத்தை குறை சொல்வது சரியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு அணியாக நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது முக்கியம். குழுவாக சேர்ந்து வேலை செய்வது முக்கியம். ஆனால் ஒன்றை மட்டும் சொல்வேன். ஒருவேளை நாங்கள் சற்று குறைந்த ரன்களால் தோல்வியை சந்தித்திருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement