இந்த சான்ஸை விட்டா.. அடுத்த 12 வருசத்துக்கு உ.கோ ஜெயிக்க முடியாது.. காரணம் அது தான்.. சாஸ்திரி எச்சரிக்கை

Ravi Shastri
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையின் இந்தியா தங்களுடைய 9 லீக் போட்டியில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து போன்ற அணிகளை தோற்கடித்த இந்தியா வலுவான தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி லீக் சுற்றில் தோல்வியடையாத ஒரே அணியாக புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.

அதனால் செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற இந்தியா நாக் அவுட் போட்டிக்கு முன்பாக நேற்று தீபாவளி தினத்தன்று பெங்களூருவில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியிலும் நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும் தற்போதைய அணியில் ரோகித் சர்மா, கில், விராட் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ் ஆகிய அனைத்து பேட்ஸ்மேன்களும் நல்ல ஃபார்மில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

சாஸ்திரி எச்சரிக்கை:
அதே போல ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகிய ஸ்பின்னர்கள் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தும் நிலையில் சிராஜ், ஷமி, பும்ரா ஆகியோர் வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு வருகிறார்கள். அதனால் உச்சக்கட்ட ஃபார்மில் அதிரடியாக செயல்பட்டு வருவதால் இந்தியா நிச்சயம் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தங்கமான வாய்ப்பை தவற விட்டால் அடுத்த 12 வருடங்களில் 3 உலகக் கோப்பையை வெல்வது கடினம் என்று ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார். ஏனெனில் ரோஹித் – விராட் போன்ற சீனியர்கள் ஓய்வு பெற்ற விடுவார்கள் என்பதால் அடுத்த தலைமுறை வீரர்கள் முதிர்ச்சி மற்றும் அனுபவத்தை பெற்று சாதிப்பதற்கு நாட்களாகும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த நாடு வெற்றிக்காக பைத்தியத்தை போல் செல்கிறது”

- Advertisement -

“அவர்கள் கடைசியாக 12 வருடங்களுக்கு முன் உலகக்கோப்பை வென்றனர். இப்போது அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக தற்போது விளையாடும் விதத்திற்கு அவர்கள் கோப்பையை வெல்ல அற்புதமான வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை இம்முறை கோப்பையை தவறவிட்டால் அவர்கள் அடுத்த 3 உலகக் கோப்பையில் வெற்றிக்கான முயற்சிகளைப் பற்றி சிந்திப்பதற்கு கூட காத்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: அதிரடி 350 ரன்ஸ்.. அசால்ட்டான சிக்ஸர்ஸ்.. வெ.இ, இங்கிலாந்து அணிகளை மிஞ்சிய இந்தியா.. 3 புதிய உலக சாதனை

“ஏனெனில் தற்போதைய அணியில் இருக்கும் 7 முதல் 8 வீரர்கள் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது கடைசி உலக கோப்பையாக இருக்கலாம். எனவே தற்போது விளையாடும் விதத்திற்கு நிச்சயமாக இந்த அணியால் வெல்ல முடியும்” என்று கூறினார். அப்படி வெற்றி நடை போடும் இந்தியா அடுத்ததாக செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. எனவே அப்போட்டியில் வென்று ஃபைனலிலும் சாதனை படைத்து கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை இந்தியா நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement