- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பைனல் மேட்ச்ல இதுமட்டும் நடந்தா ரோஹித்தோட கரியர் டோட்டலா ஓவர் – வெளியான லேட்டஸ்ட் தகவல்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றிய கையோடு டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக இருக்கும் அவர் தனது கிரிக்கெட் கரியரின் கடைசி கட்டத்தை எட்டியுள்ளார். அதனால் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரானது அவருக்கு மிக முக்கிய தொடராக மாறியுள்ளது.

இக்கட்டான நிலையில் இருக்கும் ரோஹித் சர்மா :

தற்போது துபாய் மண்ணில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை வழிநடத்தி வரும் ரோகித் சர்மா இறுதிப் போட்டி வரை இந்திய அணியை கொண்டு வந்து அசத்தியுள்ளார். மேலும் இறுதிப்போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

- Advertisement -

ஆனாலும் இந்த இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினால் அவர் ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அடுத்ததாக இந்திய அணிக்கு ஜூன் மாதம் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது.

அதேபோன்று 2027 50 ஓவர் உலக கோப்பையையும் எதிர்நோக்கி இந்திய அணி சில முக்கிய முடிவுகளை எடுக்க காத்திருக்கிறது. எனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்க நேரிடும் என்று தெரிகிறது. ஏனெனில் அடுத்த உலக கோப்பை தொடருக்குள் ரோகித் சர்மாவுக்கு 40 வயதாகிவிடும் என்பதனால் இந்த முடிவை அவர் எடுக்க உள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

ஒருவேளை இந்திய அணி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினால் கூட அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஒரு சாதாரண பேட்ஸ்மேனாகவே தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இன்னும் சில தொடர்கள் மட்டுமே அவர் விருப்பப்படி அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அதன் பின்னர் அவர் அணியிலிருந்து நீக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி பைனல் மேட்சுக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

எனவே ரோகித் சர்மாவே நாளைய போட்டியுடன் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக ஹார்டிக் பாண்டியா அல்லது சுப்மன் கில் ஆகிய இருவரில் ஒருவர் கேப்டனாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -