இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியானது நாளை மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி 1 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியில் விளையாட இருக்கும் இரு அணியைச் சேர்ந்த வீரர்களும் தற்போது தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர்.
இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளெயிங் லெவன் இப்படித்தான் இருக்கும் :
இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. ஏனெனில் லீக் சுற்று போட்டிகளின் போது ஹர்ஷித் ராணாவுடன் விளையாடிய இந்திய அணியானது கடைசியாக நடைபெற்ற அரையிறுதி போட்டி மற்றும் கடைசி லீக் போட்டி ஆகிய ஆட்டங்களில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை இணைத்து விளையாடி இருந்தது.
இதன் காரணமாக இந்த இறுதி போட்டியில் இந்திய அணியில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? அல்லது இந்திய அணி அதே அணியுடன் செல்லுமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் பார்க்கையில் : இந்திய அணி ஏற்கனவே கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த லீக் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் எவ்வித மாற்றமும் இன்றி விளையாடியதால் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியும் எவ்வித மாற்றமின்றி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக முகமது ஷமி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும், அக்சர் பட்டேல், ஜடேஜா, குல்தீப் மற்றும் வருண் ஆகியோர் சுழப்பந்து வீச்சாளர்களும் தொடர்வார்கள் என்று தெரிகிறது. மற்றபடி இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.
அதோடு தொடர்ந்து வெற்றி பெற்று வரும் அணியாகவும் இருப்பதால் இந்த யூனிட்டில் எந்த எவ்வித மாற்றத்தையும் செய்ய கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் விரும்ப மாட்டார்கள். அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : இதை மறந்துட்டு அவரை சமாளிச்சுட்டா.. ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தலாம்.. நியூஸிலாந்துக்கு அக்தர் ஆலோசனை
1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) முகமது ஷமி, 11) வருண் சக்ரவர்த்தி.



