இதை மறந்துட்டு அவரை சமாளிச்சுட்டா.. ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தலாம்.. நியூஸிலாந்துக்கு அக்தர் ஆலோசனை

Shoaib Akhtar
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மார்ச் 9ஆம் தேதி துபாயில் மோதுகின்றன. இதே தொடரின் லீக் போட்டியில் இதே துபாய் மைதானத்தில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா அசத்தியது. எனவே தற்போதைய நிலைமையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியை தோற்கடித்து மீண்டும் இந்தியா கோப்பையை வெல்வதற்கு பிரகாச வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் 2000 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டிகளில் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து கோப்பைகளை வென்ற வரலாறு இருக்கிறது. எனவே 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் உட்பட ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எப்போதும் சவாலைக் கொடுக்கும் அணியாகவே நியூசிலாந்து வலம் வருகிறது. இந்நிலையில் இந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்பில் இந்தியாவை விட தாழ்த்தப்பட்டவர்கள் என்று நியூசிலாந்து நினைக்கக்கூடாது என சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வலுவான இந்தியா:

மேலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை பவர்பிளே ஓவர்களில் அட்டாக் செய்யவிடாமல் தடுத்தால் நியூசிலாந்து வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி பிடிவி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறோம் என்பதையும் அவர்களை விட தாழ்த்தப்பட்டவர்கள் என்பதையும் மறக்க வேண்டும்”

“நீங்கள் மிகச் சிறந்தவர்கள் அல்ல என்பதையும் மறக்க வேண்டும். கேப்டன் சான்ட்னரிடம் அந்த தன்னம்பிக்கை இருக்கிறது. அதை அவரிடம் பார்த்துள்ளேன். கேப்டனாக அவர் இந்தக் கோப்பையை வெல்ல விரும்புகிறார். நீங்கள் இறுதிப் போட்டியில் சரியான விஷயத்தை சரியான நேரத்தில் செய்ய வேண்டும். நீங்கள் இந்தியாவின் வேகத்தை உடைக்க வேண்டும்”

- Advertisement -

அக்தர் ஆலோசனை:

“ரோகித் சர்மா அட்டாக் செய்யும் முயற்சிப்பார். குறிப்பாக சான்ட்னர் உட்பட நியூசிலாந்து ஸ்பின்னர்களை அவர் நொறுக்க முயற்சி செய்வார். அந்த நேரத்தில் கேப்டனாக சான்ட்னர் அதை கையாள வேண்டும். என்னைக் கேட்டால் தற்போதைய நிலைமையில் 70க்கு 30 என்ற அளவுக்கு இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர்களுடைய பேட்டிங், ஸ்பின் பவுலிங் ஆகியவை முதிர்ச்சியுடன் இருக்கிறது”

இதையும் படிங்க: நியூசிலாந்து அணி செமி பைனல் வரை முன்னேற காரணமே தோனி தான்.. வித்தியாசமான கருத்தை கூறிய – வாசிம் ஜாபர்

“எனவே போட்டி நாளில் வெற்றி பெற நியூசிலாந்து தங்களுடைய உயர்ந்த செயல்பாடுகளை கொண்டு வர வேண்டும்” என்று கூறினார். அந்த வகையில் இந்தப் போட்டி அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது உள்ளது. அந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 2.30 மணிக்கு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement