2011 உலககோப்பை செமி பைனலில் மட்டும் நான் விளையாடி இருந்தா – சோயப் அக்தர் பேச்சு

shoaib akhtar sachin tendulkar
- Advertisement -

கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா இங்கிலாந்தை காட்டிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் பரம எதிரிகளாக பார்க்கப்படுகின்றனர். ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்த டாப் 2 அணிகளும் அண்டை நாடுகளாக இருப்பதால் கிரிக்கெட் என்பதை வெறும் விளையாட்டுப் போட்டியாக பார்க்காமல் ஒரு கௌரவமாகக் கருதுகின்றனர். அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வதால் அந்த போட்டியில் அனல் பறக்கும். அதிலும் இவ்விரு அணிகள் மோதும் உலகக்கோப்பைப் போட்டிகள் என்றால் கோப்பையை வெல்வதை விட அந்த போட்டியில் வென்ற தீர வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணி வீரர்களும் மோதிக் கொள்வார்கள்.

- Advertisement -

ஆனாலும் ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை என்று வந்தால் என்னதான் தரமான வீரர்களை வைத்திருந்தாலும் கூட பாகிஸ்தானை தொடர்ச்சியாக தோற்கடித்து வரும் இந்தியா இதுவரை ஒருமுறை கூட தோற்றதில்லை. அந்த அளவுக்கு உலக கோப்பைகளில் பாகிஸ்தானை ஆளும் இந்தியா வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது. அதில் ஒரு பகுதியாக கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பையில் லீக் சுற்றில் அசத்திய எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா காலிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரையிறுதியில் பாகிஸ்தானை சந்தித்தது.

மொஹாலி செமிபைனல்:
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற அந்த அரையிறுதிப் போட்டியை இரு நாட்டைச் சேர்ந்தவர்களும் திருவிழாவைப் போல் கருதினர். அதனாலேயே அதை பார்ப்பதற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் நேரடியாக மொஹாலி மைதானத்திற்கு வந்திருந்தனர். அப்படிப்பட்ட மிகப்பெரிய சூழ்நிலையில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சச்சின் டெண்டுல்கர் 85 ரன்கள் குவிக்க 260/9 ரன்களை எடுத்தது. அதை துரத்திய பாகிஸ்தான் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று பின்னர் இலங்கையை தோற்கடித்து 28 வருடங்கள் கழித்து உலக கோப்பையை முத்தமிட்டு சரித்திரம் படைத்தது. அந்த போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தருக்கு உடல்தகுதியில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால் அந்த அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கவில்லை. இருப்பினும் அப்போட்டியில் தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் சச்சின், சேவாக் போன்றவர்களை அவுட்டாக்கி இந்தியாவை தோற்கடித்திருக்க முடியும் என்று தற்போது கூறியுள்ளார்.

- Advertisement -

வாய்ப்பு கிடைக்கல:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “மொஹாலி நினைவுகள் இன்னும் என்னை ஆட்டிப்படைக்கிறது. அந்த 2011 உலக கோப்பை அரை இறுதியில் பாகிஸ்தான் என்னை தேர்வு செய்திருக்க வேண்டும். அந்த நாளில் பாகிஸ்தான் அணி நிர்வாகம் நடந்துகொண்டது நியாயமற்றது. என்னுடைய கேரியரில் கடைசி 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளது என்று எனக்கு தெரியும். அதனால் வான்கடேவில் எங்களது கொடியை உயரப் பறக்க விடும் வகையில் பைனலில் விளையாடும் ஆசை எனக்கு இருந்தது. எங்களது மொத்த நாடும் ஊடகங்களும் எங்களின் வெற்றிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்”

Akhtar

“ஆனால் அணி நிர்வாகத்தினர் என்னை உடல் தகுதியற்றவர் என்று கூறினார். இருப்பினும் பயிற்சி களத்திற்கு சென்ற நான் 8 தொடர்ச்சியான ஓவர்களை வீசினேன். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அந்த போட்டியில் நான் விளையாடியிருந்தால் நிச்சயம் சச்சின் மற்றும் சேவாக்கை அவுட் செய்திருப்பேன். சச்சின் மற்றும் சேவாக்கை ஆரம்பத்திலே அவுட் செய்திருந்தால் இந்தியா சீட்டுக்கட்டு போல சரிந்திருக்கும். ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றத்தை கொடுத்தது”

- Advertisement -

“அதைவிட பாகிஸ்தான் தோற்ற போட்டியை 5 – 6 மணி நேரங்கள் உட்கார்ந்து பார்த்தது வேதனையாக இருந்தது. தோல்விக்காக அழக்கூடியவன் நான் கிடையாது. அதனால் உடைமாற்றும் அறையில் ஒரு சில பொருட்களை உடைத்தேன். நான் சோகமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது போல் எங்களது தேசமும் இருந்தது. அப்போட்டியில் நான் விளையாடியிருந்தால் முதல் 10 ஓவர்களிலேயே இந்தியாவின் ஆட்டத்தை பார்த்திருப்பேன்” என்று கூறினார்.

Akhtar

அதற்கு முன் நிறைய போட்டிகளில் சச்சின், சேவாக் போன்றவர்களை தனது அதிரடியான வேகத்தால் அவுட் செய்துள்ள சோயப் அக்தர் அந்த உலக கோப்பை போட்டியில் தமக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் நிச்சயம் முதல் 10 ஓவர்களில் அவர்களை அவுட் செய்து இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்திருப்பேன் என்று கூறுகிறார். இருப்பினும் 2003 உலகக்கோப்பையில் இதை அக்தரை சச்சின் டெண்டுல்கர் அசால்டாக அடித்த சிக்ஸரை அவர் மறந்து விட்டது போல் தோன்றுகிறது.

இதையும் படிங்க : மில்லரின் அதிரடியை தடுத்து நிறுத்தணும்னா இதுமட்டும் தான் வழி – புவனேஷ்வர் குமார் நகைச்சுவை

மேலும் அந்த உலக கோப்பையில் தனது கேரியரின் கடைசி தருணத்தில் இருந்த சோயப் அக்தர் உலகக் கோப்பையை வென்று விடை பெறலாம் என்று ஆசைப்பட்டதாகவும் ஆனால் உடல் தகுதியை காரணம் காட்டி தம்மைப் புறக்கணித்து அப்போதைய பாகிஸ்தான் அணி நிர்வாகம் வாய்ப்பளிக்க மறுத்து விட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

Advertisement