மில்லரின் அதிரடியை தடுத்து நிறுத்தணும்னா இதுமட்டும் தான் வழி – புவனேஷ்வர் குமார் நகைச்சுவை

Bhuvi
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜூன் 9ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கியது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 211 ரன்களை அடித்ததால் 212 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நிச்சயம் இவ்வளவு பெரிய இலங்கை தென்னாப்பிரிக்கா அணி சேசிங் செய்யாது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரரான டேவிட் மில்லரின் அபாரமான ஆட்டம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 212 ரன்கள் குவித்த 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

miller 2

- Advertisement -

இந்த போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 31 பந்துகளை சந்தித்து 5 சிக்சர் உட்பட 64 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த அதிரடி ஆட்டம் ஆட்டம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் வென்றது. அதோடு இந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் டேவிட் மில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரின் 18-வது ஓவரில் டேவிட் மில்லர் மற்றும் வேண்டர்டுசன் ஆகியோர் 22 ரன்கள் அடித்து சிதறடித்தனர். இந்த ஓவரும் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த போட்டியில் மில்லரின் அதிரடியை சமாளிக்க என்ன திட்டம் இருக்கிறது என்று பத்திரிகையாளர் சந்திப்பில் புவனேஸ்வர் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நகைச்சுவையான பாணியில் பதில் அளித்த அவர் கூறுகையில் :

David Miller SA

மில்லருக்கு எதிராக பந்து வீசுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில் அவர் தற்போது மிகச்சிறப்பான பார்மில் இருக்கிறார். அடுத்த போட்டியில் அவரது அதிரடி தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் நிச்சயம் தென்ஆப்பிரிக்கா அணி அவரை நீக்கினால் மட்டுமே அது முடியும். ஆனால் தென் ஆப்பிரிக்க அணி அதனை செய்யாதே என கிண்டலாக கூறினார். இதனால் பத்திரிகையாளர் சந்திப்பில் சிரிப்பலை எழுந்தது.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : மில்லர் ஐபிஎல் தொடரில் இருந்து மிகச்சிறப்பான பார்மில் இருந்து வருகிறார். அவருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம். முதல் போட்டியில் நாங்கள் பெற்ற தோல்விக்கு பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை என்பதே காரணம். அதனை நாங்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இதையும் படிங்க : முதலில் ஏதாவது சாதிக்கட்டும் பின்பு பார்ப்போம் ! அக்தர் – உம்ரான் மாலிக் ஒப்பீடு பற்றி முன்னாள் பாக் வீரர் கருத்து

இருப்பினும் கடந்த போட்டியில் எங்கு எங்கு தவறு செய்தோம் என்பதை உணர்ந்து அதனை நிவர்த்தி செய்து இரண்டாவது போட்டியில் மீண்டும் சிறப்பாக செயல்படுவோம். இன்னும் தொடரில் 4 போட்டிகள் உள்ளதால் நிச்சயம் இந்திய அணி இத்தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக கருதுவதாக புவனேஸ்வர் குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement