ஐசிசி உலக கோப்பை 2023 : இந்திய மண்ணில் கருப்பு குதிரையாக கோப்பை வெல்லுமா – நியூஸிலாந்து அணியின் முழுமையான அலசல்

Newzeland Team 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் சிறந்து செயல்பாடுகளை வெளிப்படுத்தி 2011 போல இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் அதற்கு முதலில் எங்களை தாண்டி கோப்பையில் கையை வையுங்கள் என்று சொல்லும் அளவுக்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு நிகராக நியூசிலாந்து தரமான அணியாக இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் உட்பட கடந்த 18 வருடங்களாக நடைபெற்ற ஐசிசி தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா எப்போதுமே வென்றதில்லை.

1975 முதலே முதல் கோப்பையை வெல்வதற்கு போராடி வரும் நியூசிலாந்து 2015இல் ஃபைனலில் சென்று தோற்றது. அதே போல 2019 உலகக் கோப்பையில் கேன் வில்லியம்சன் தலைமையில் அபாரமாக செயல்பட்டு ஃபைனலில் அசத்திய அந்த அணி தோல்வியை சந்திக்காத போதிலும் ஐசிசி’யின் நியாயமற்ற விதிமுறையால் இங்கிலாந்திடம் கோப்பையை தாரை வார்த்தது. எனவே இம்முறை இந்திய மண்ணில் சாதிப்பதற்கு வரும் நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

நியூஸிலாந்து அணி:
குறிப்பாக 2019 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்ற அவர் 2023 ஐபிஎல் தொடரில் காயத்தை சந்தித்ததால் விளையாட மாட்டார் என்ற செய்திகள் வெளியான போதிலும் வேகமாக குணமடைந்து கேப்டனாக களமிறங்க உள்ளார். அவருடன் ஐபிஎல் 2023 தொடரில் சென்னைக்கு 600க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து கோப்பையை வெல்ல உதவியை தொடக்க வீரர் டேவோன் கான்வே இந்திய சூழ்நிலைகளுக்கு நன்றாக பழகியுள்ளதால் எதிரணி பவுலர்களை வெளுப்பதற்கு தயாராக இருக்கிறார்.

அவருக்கு நிகரான ஜோடியாக அனுபவமிக்க டாம் லாதம் தயாராக இருக்கும் நிலையில் வில் எங், மார்க் சாப்மேன் ஆகியோர் பேட்டிங் துறையில் வெற்றிக்கு போராடும் திறமையும் தெம்பும் நிறைந்த வீரர்களாக இருக்கின்றனர். மேலும் மிடில் ஆர்டரில் கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடிய ஃபினிஷிங் செய்யக்கூடிய வீரராக சமீப காலங்களில் அசத்தி வரும் நிலையில் ஜிம்மி நீசம், டார்ல் மிட்சேல் ஆகியோர் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அசத்தும் மித வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக பலம் சேர்க்கிறார்கள்.

- Advertisement -

மேலும் சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் அசத்துவதற்கு இஷ் சோதி, ரச்சின் ரவீந்தரா, மிட்சேல் சாட்னர் ஆகியோர் ஏற்கனவே தங்களுடைய திறமைகளை நிரூபித்த தரமான ஸ்பின்னர்களாக தயாராக இருக்கிறார்கள். அதில் சாட்னர் டெயில் எண்டராக வந்து அதிரடியாக ரன்களை சேர்க்கும் திறமையை கொண்டுள்ளது நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஆழத்தை அதிகரிக்கிறது.

அதை விட டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக மத்திய ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய டிரெண்ட் போல்ட் நாட்டுக்காக உலகக்கோப்பையை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தொடரில் விளையாடுவதற்காக தாமாக வந்துள்ளார். அவர் புதிய பந்தை ஸ்விங் செய்து எந்தளவுக்கு பவர்பிளே ஓவர்களில் பேட்ஸ்மேன்களை தெறிக்க விடுவார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதையும் படிங்க: ஏசியில் உட்காந்துருந்தா அப்டி தான் இருக்கும்.. எகத்தாளமான கேள்வி கேட்ட ஹர்ஷா போக்லேவுக்கு ஷமி கிண்டலான பதில்

அவருடன் அனுபவமிக்க டிம் சௌதீ 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய லாக்கி பெர்குசன் மற்றும் மாட் ஹென்றி ஆகியோர் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சு துறையை வலுப்படுத்துகின்றனர். அப்படி இந்த அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளனர். அதனால் இந்தியா உள்ளிட்ட அனைத்து எதிரணிகளுக்கும் மெகா சவாலை கொடுத்து 2023 உலகக்கோப்பையை இம்முறை தவற விடாமல் தட்டி தூக்கும் அளவுக்கு நியூசிலாந்து கருப்பு குதிரை அணியாக இருக்கிறது என்பதே க்ரிக்தமிழ் இணையத்தின் அலசலாகும்.

Advertisement