காந்த குரல் நாயகன்கள்.. பிஷப், சாஸ்திரி, இயன் ஸ்மித் முதல் டிகே வரை – ரசிகர்களை மகிழ்விக்கும் 2023 உ.கோ வர்ணனையாளர்கள் லிஸ்ட்

Commentators List
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்க போகும் ஐசிசி 2023 உலகக் கோப்பை அக்டோபர் ஐந்து முதல் நவம்பர் 19 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாடி கோப்பையை வெல்வதற்காக முழு பலத்துடன் போராட உள்ளதால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்று சொல்லலாம்.

மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜோஸ் பட்லர், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் உட்பட உலகின் அனைத்து தரமான நட்சத்திர வீரர்களும் இந்த தொடரில் உங்களுடைய நாட்டின் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் பெரும்பாலான போட்டிகள் அனல் பறக்கும் என்பது சந்தேகமில்லை. எனவே சொந்த மண்ணில் இந்திய ரசிகர்களைப் பொறுத்த வரை 2011 போல ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றால் அதைத் திருவிழா போல கொண்டாடுவதற்கு தயாராக இருக்கின்றனர்.

- Advertisement -

வர்ணனையாளர்கள் லிஸ்ட்:
இந்நிலையில் இந்த உலகக்கோப்பையில் வர்ணனையாளர்களாக செயல்பட்டு ரசிகர்களை மகிழ்விக்கப் போகும் நட்சத்திரம் முன்னாள் வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. பொதுவாகவே உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் முக்கியமான தருணங்களை அற்புதமான வார்த்தைகளால் விவரித்து ரசிகர்களுக்கு நீங்காத நினைவுகளை ஏற்படுத்துவதில் வர்ணனையாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள்.

குறிப்பாக 2011 உலகக்கோப்பை ஃபைனலில் தோனி சிக்சர் அடித்ததை இப்போது நினைத்தால் கூட வீடியோவாக பார்க்காமலேயே கண்முன்னே வரும் அளவுக்கு ரவி சாஸ்திரி செய்த வர்ணனையை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த வகையில் இத்தொடரில் அனைத்து 10 நாடுகளின் சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரர்களாக செயல்பட உள்ளனர். அதில் இந்தியாவின் காந்த குரல் நாயகன் ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், வர்ணனையில் லேட்டஸ்ட்டாக அசத்தும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

மேலும் 2 உலக கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், கம்பீரக் குரலால் பேசக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான், பரபரப்பான தருணத்தை த்ரில்லாக வர்ணிக்கக்கூடிய நியூஸிலாந்தின் இயன் ஸ்மித் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள். இது போக அஞ்சும் சோப்ரா, லிசா போன்ற முன்னாள் நட்சத்திர வீராங்கனைகளும் வருணையாளர்களாக செயல்பட உள்ளனர். அந்த பட்டியல்:

இதையும் படிங்க: கஷ்டப்பட்ட உழைச்ச அவங்க அப்டியே போய்டணுமா? இந்திய சீனியர் வீரர்கள் பற்றிய சாஸ்திரியின் கருத்துக்கு – யுவராஜ் சிங் பதிலடி

சுனில் கவாஸ்கர், ஹர்ஷா போக்லே, ரவி சாஸ்திரி, சஞ்சய் மஞ்ரேக்கர், தினேஷ் கார்த்திக், அஞ்சும் சோப்ரா, ஷேன் வாட்சன், ரிக்கி பாண்டிங், லிசா ஸ்தலேகர், ஆரோன் பின்ச், மேத்தியூ ஹெய்டன், டிர்க் நேன்னிஸ், மார்க் ஹோவார்ட், நாசர் ஹுசைன், மைகேல் அதேர்டன், இயன் மோர்கன், மார்க் நிக்கோலஸ், இயன் வார்ட், இயன் பிஷப், சாமுவேல் பத்ரீ, காஸ் நைடூ, ஷான் பொல்லாக், நடாலியா ஜெர்மனிஸ், இயன் ஸ்மித், சைமன் டௌல், கேட்டி மார்ட்டின், ரஸ்ஸல் அர்னால்ட், ரமீஸ் ராஜா, வக்கார் யூனிஸ், அக்தர் அலி கான், பொம்மி மப்வங்கா

Advertisement