டி20யால் சர்வதேச கிரிக்கெட்டை அழியாமல் ஐசிசி காப்பாற்றனும் – ஐபிஎல்க்கு எதிராக குரல் கொடுத்த இந்திய ஜாம்பவான்

T2 World Cup vs IPL ICC vs BCCI
Advertisement

நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகள் 5 நாட்கள் கடந்தும் ட்ராவில் முடிந்ததால் ரசிகர்களை கவர்வதற்காக துவங்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் 90களில் மிகவும் பிரபலமடைந்தது. அதை மையப்படுத்தி சாம்பியனை தீர்மானிக்கும் உலக கோப்பையும் அறிமுகப்படுத்தப் பட்டதால் டெஸ்ட் போட்டிகளை பின்னுக்கு தள்ளிய ஒருநாள் கிரிக்கெட் நம்பர் 1 இடத்துக்கு வந்தது. ஆனால் 21ஆம் நூற்றாண்டில் வேகத்தை மட்டுமே விரும்பும் மக்களுக்காக 3 – 4 மணி நேரங்களில் முடிவைக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட 20 ஓவர் போட்டிகள் எதிர்பாரா த்ரில்லர் திருப்பங்களுடன் அமைந்ததால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை தாண்டி ரசிகர்கள் அபிமானத்தை பெற்று நம்பர் ஒன் இடத்தை தனதாக்கியது.

IPL 2022 (2)

அதை பார்த்து தரமான இளம் வீரர்களை கண்டறியும் நோக்கில் 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் கடந்த 15 வருடங்களில் இந்தியாவுக்கு வெளிநாடுகளுக்கும் நிறைய தரமான வீரர்களை உருவாக்கி கொடுத்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஓவருக்கு ஓவர் அனல் பறந்து ரசிகர்கள் எதிர்பாராத திருப்பங்களை முடிவாக கொடுக்கும் ஐபிஎல் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை மிஞ்சும் அளவுக்கு தரத்தில் உயர்ந்து ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுக்கிறது. அதனால் இந்த வருடம் 10 அணிகளுடன் விரிவடைந்த ஐபிஎல் தொடரின் 2023 – 2027 வரையிலான ஒளிபரப்பு ஏலம் சமீபத்தில் 48,390 கோடிக்கு ஏலம் போனது.

- Advertisement -

அசுரனாக ஐபிஎல்:
அதன் காரணமாக கிரிக்கெட் என்பதையும் தாண்டி உலக அளவில் அதிக பணத்தை வருமானமாகக் கொடுக்கும் 2வது விளையாட்டாக உருவெடுத்துள்ள ஐபிஎல் 2024 முதல் 94 போட்டிகளாக மேலும் விரிவடைய உள்ளது. இதனால் முன்பை விட பணமும் தரமான போட்டிகளும் கிடைக்கும் என்றாலும் அதனால் சர்வதேச போட்டிகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுபோக வருடம் முழுவதும் விளையாடினாலும் கிடைக்காத சம்பளத்தை ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் வெறும் 2 மாதங்களில் விளையாடி கோடிக்கணக்கில் சம்பாதிப்பதால் இப்போதெல்லாம பெரும்பாலான வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட பணத்துக்காக விளையாட முன்னுரிமை கொடுக்கின்றனர்.

INDvsSL

மேலும் ஐபிஎல், பிக்பேஷ் போன்ற தொடர்களின் வளர்ச்சியை பார்த்து துபாய், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளும் தற்போது புதிதாக டி20 தொடர்களை துவக்கி அதற்காக தாங்கள் பங்கேற்கும் சர்வதேச போட்டிகளை ரத்து செய்வதாக பகிரங்கமாக அறிவித்துள்ளன. மொத்தத்தில் பொழுது போக்கிற்காகவும் திறமையான வீரர்களை கண்டறிவதற்கும் துவங்கப்பட்ட ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் இன்று சர்வதேச கிரிக்கெட்டை அழிக்கும் அரக்கனாக அச்சுறுத்துகிறது.

- Advertisement -

கபில் கோரிக்கை:
அதிலிருந்து தங்களுக்கும் வருமானம் வருவதால் ஐசிசியும் அதற்கு தலையசைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களுக்கு வளைந்து கொடுக்காமல் அழிவின் பிடியில் சிக்கியுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை காப்பாற்றுமாறு ஐசிசிக்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் வெளிப்படையாக கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி பிரபல சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகையில் அவர் பேசியது பின்வருமாறு.

Kapil-Dev

“இது சர்வதேச கிரிக்கெட்டை மறைத்து வருவதாக நான் நினைக்கிறேன். இந்த விளையாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் ஐசிசிக்கு பெரிய பொறுப்புள்ளது. தற்போதைய கிரிக்கெட் வளர்ச்சி ஐரோப்பாவில் நிலவும் கால்பந்தை நோக்கி செல்கிறது. அதில் ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுக்கு எதிராக விளையாடாமல் 4 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் (உலகக்கோப்பையில்) மோதிக்கொள்கிறார்கள். எனவே கால்பந்தை போல உலக கோப்பையில் மட்டும் சர்வதேச கிரிக்கெட்டை விளையாடி விட்டு எஞ்சிய நேரங்களில் கிளப் போட்டிகளில் விளையாட போகிறோம்” என்று கூறினார்.

- Advertisement -

அதுபோக நாட்டுக்காக விளையாடாமல் பணத்துக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடத் விரும்பும் கிரிக்கெட் வீரர்களை சாடும் வகையில் கபில் தேவ் கோபத்துடன் பேசியது பின்வருமாறு. “அதேபோல் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் அல்லது பிக்பேஷ் போன்ற தொடர்களில் விளையாடினால் போதும் என்று நினைக்கிறார்களா? எனவே இந்த அம்சத்தில் ஐசிசி அதிக நேரத்தை செலவழித்து கிளப் கிரிக்கெட்டுக்கு மத்தியில் எப்படி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற முடியும் என்று பார்க்க வேண்டும்”

ICC

“கிளப் கிரிக்கெட் மற்றும் பிக்பேஷ் போன்ற தொடர்கள் நீண்டகாலம் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது தென்னாப்பிரிக்கா, துபாய் போன்ற தொடர்களும் வந்துள்ளதால் அனைத்து நாடுகளும் கிளப் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும். மேலும் சர்வதேச கிரிக்கெட் உலகக் கோப்பையில் மட்டும் விளையாட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்” என்று எச்சரித்தார்.

இதையும் படிங்க : இந்தியா ஸ்ட்ராங் தான். ஆனாலும்.. ஆசியக்கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான் – முன்னாள் பாக் வீரர்

இதுநாள் வரை ஐபிஎல் போன்ற டி20 தொடர்களுக்கு வெளிநாட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் முதல் முறையாக இந்திய ஜாம்பவான் கபில் தேவ் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement