இந்தியா ஸ்ட்ராங் தான். ஆனாலும்.. ஆசியக்கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான் – முன்னாள் பாக் வீரர்

pakisthan IND vs PAK
- Advertisement -

ஆசிய கண்டத்தின் கிரிக்கெட் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை 2022 தொடர் வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. விரைவில் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரில் ஆசியாவின் டாப் 6 அணிகள் மோதுகின்றன. இதற்காக அந்தந்த நாட்டு வாரியங்கள் தங்களது அணியை அறிவித்துள்ள நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி இந்தியா தனது முதல் போட்டியில் ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது.

- Advertisement -

பொதுவாகவே இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனல் பறக்கும் என்ற நிலையில் சமீப காலங்களில் எல்லைப் பிரச்சனை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதிக் கொள்ளாமல் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதுக்கின்றன. அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளுக்கு முன்பைவிட மவுசு அதிகரித்துள்ள நிலையில் கடைசியாக இதே துபாய் மண்ணில் இவ்விரு அணிகளும் மோதிய போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வ வைத்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை உலக கோப்பையில் தோற்கடித்தது.

வெல்லப்போவது யார்:
அதனால் அவமான தோல்வியை சந்தித்த இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் பாகிஸ்தானை பதம் பார்த்து பழி தீர்க்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் வரலாற்றில் நடைபெற்ற 14 ஆசிய கோப்பைகளில் 7 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள இந்தியா வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. அதுபோக கடைசியாக கடந்த 2018இல் இதே துபாயில் நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வென்ற இந்தியா இம்முறை நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது.

Asia-Cup

அதுபோக சமீப காலங்களில் இங்கிலாந்து போன்ற வலுவான அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து நல்ல பார்மில் இருக்கும் இந்தியா பாகிஸ்தான், இலங்கை போன்ற இதர அணிகளை காட்டிலும் வலுவான அணியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த தொடரில் இந்தியாவை மீண்டும் பாகிஸ்தான் தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்று நிறைய பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கணித்து வருகிறார்கள்.

- Advertisement -

திறமையை வீழ்த்தும்:
அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் வீரர் சல்மான் பட் பாகிஸ்தானை விட இந்தியா தரத்திலும் திறமையிலும் பலமான அணியாக இருந்தாலும் அவர்களை பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் அவர்கள் ஆசிய கோப்பையை வெல்வார்கள். ஏனெனில் அவர்கள் என்ன விட்டமின் சி குறைபாடு கொண்டவர்களா? இந்த தொடரில் உண்மையான போட்டி போடும் எந்த அணியும் வெற்றி பெறலாம். குறிப்பாக எதார்த்தத்தையும் நிதர்சனத்தையும் வைத்து பார்க்கும் போது இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது”

INDvsPAK

“அவர்கள் கிரிக்கெட் விளையாடும் விதத்தை வைத்தும் அவர்களிடம் இருக்கும் தரமான வீரர்களை வைத்தும் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அனைவரும் கருதுகிறார்கள். அவர்களது அணியில் உள்ள வீரர்கள் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்கள். அதனாலேயே அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அனைவரும் கருதுகின்றனர்”

- Advertisement -

“பாகிஸ்தானிடம் குறிப்பிட்ட சில வீரர்கள் இல்லை. நாம் நமது சிஸ்டத்தை நம்பும்படியாகவும் இல்லை. மேலும் நம்முடைய 2வது தர அணி உலகில் எங்கும் விளையாடுவதில்லை. அதனால் பாபர், ரிஸ்வான், ஷாஹீன், பகார் போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வுளிக்க முடியாது. எனவே நம்மிடம் தன்னம்பிக்கையும் இல்லை. ஆனாலும் பாகிஸ்தான் தன்னுடைய நாளில் உலகின் எந்த அணியையும் வீழ்த்தும் என்பதை அனைவரும் அறிவோம்”

Butt

“அதுபோக வெற்றியாளரை உறுதியாக சொல்ல முடியாத டி20 கிரிக்கெட்டில் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் போட்டியின் தலையெழுத்தை மாற்ற கூடியது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானும் கருப்பு குதிரையாகும். எப்போதாவது சிறப்பாக விளையாடும் வங்கதேசம் பெரும்பாலும் சுமாராக விளையாடும்” என்று கூறினார். தற்போது ஆசிய கோப்பைக்கு ரோகித் சர்மா தலைமையில் முதல் தர இந்திய அணி தயாராகும் போது ராகுல் தலைமையில் ஜிம்பாப்வேயில் இரண்டாவது தர இந்திய அணி விளையாடுகிறது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் விராட் கோலி எப்படி ஆடுவார்? – கோலியின் டி20 உ.கோ இடம் குறித்து கங்குலி பேசியது என்ன?

அதுபோன்ற திறமையும் ஆழமும் பாகிஸ்தானிடம் இல்லை என்பதால் ஆசிய கோப்பையை இந்தியா வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் சல்மான் பட் அதற்காக பாகிஸ்தானை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று கூறியுள்ளார். மேலும் கடந்த டி20 உலகக்கோப்பை போல் நிச்சயமாக இந்தியாவை வீழ்த்தி ஆசிய கோப்பையை வெல்லக்கூடிய அணியாக பாகிஸ்தான் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement