இது அவுட்டா? அக்சர் பட்டேல் ரன் அவுட் குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி – ஐ.சி.சி கூறும் விதிமுறை என்ன?

Axar-Patel
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மிக முக்கியமான ஆட்டமாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

- Advertisement -

அதன்படி பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்தது. பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அதனால் பவர்பிளே-விற்குள் இந்திய அணி 26 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

அதனால் மிடில் ஆர்டரில் மேலும் சரிவு ஏற்படக்கூடாது என்பதற்காக அக்சர் பட்டேல் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். பேட்டிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அக்சர் பட்டேல் இந்த போட்டியில் 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அணியின் எண்ணிக்கை 31 ரன்கள் இருக்கும்போது ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் அவர் ரன் அவுட்டான விதம்தான் ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வியை எழுப்பியது.

axar patel 1

ஏனெனில் பந்து விக்கெட் கீப்பர் ரிஸ்வான் கைக்கு செல்லும்போது அவர் பந்தோடு சேர்த்து கையையும் வேகமாக ஸ்டம்பில் அடித்தார். இப்படி ரன் அவுட் செய்யும் போது பந்து அவர் கையில் இல்லாததால் இது ரன் அவுட் தானா? என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பு வருகின்றனர். ஆனால் அதற்கு ஐசிசி தெளிவான தங்களது பதிலையும் தெரிவித்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் பந்து கீப்பர் கைகளுக்கு சென்ற பின்னர் கீப்பர் ஸ்டம்பை நோக்கி கையை நகர்த்திக் கொண்டே வந்தார். ஆனால் கையில் இருந்த பந்து அவர் கையில் இருந்து நழுவினாலும் ஸ்டம்ப்பை அடிப்பதற்கு முன்னால் பந்து சென்று ஸ்டம்பை அடித்து விட்டது. இதன் காரணமாக அது சரியான ரன் அவுட் என்று தான் அதனால் தான் அவுட் வழங்கப்பட்டதாகவும் ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க : IND vs PAK : பாகிஸ்தானை ஆளப்பிறந்த கிங் கோலி – சச்சின், ஜெயசூர்யா சாதனைகளை உடைத்து 6 புதிய உலகசாதனை, மெகா பட்டியல் இதோ

இப்படி 31 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தாலும் அதன் பின்னர் விராட் கோலி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைக்கவே இறுதியில் இந்திய அணி 20-வது ஓவரின் கடைசி பந்தில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement