IND vs PAK : பாகிஸ்தானை ஆளப்பிறந்த கிங் கோலி – சச்சின், ஜெயசூர்யா சாதனைகளை உடைத்து 6 புதிய உலகசாதனை, மெகா பட்டியல் இதோ

VIrat Kohli IND vs PAK
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 டி20 உலக கோப்பையில் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டி அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெற்றது. மெல்போர்ன் நகரில் அனல் தெறிக்க நடைபெற்ற அப்போபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 159/8 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 0, முகமது ரிஸ்வான் 4, சடாப் கான் 5 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக ஷான் மசூட் 52* (42) ரன்களையும் இப்திகார் அகமது 51 (34) ரன்களும் குவித்தனர். மறுபுறம் கட்டுக்கோப்பாக பந்து வீசிய இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா மற்றும் அரஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

INDvsPAK

- Advertisement -

அதைத்தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 4, ராகுல் 4, சூரியகுமார் 15 அக்சர் பட்டேல் 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பெரிய அதிர்ச்சியை கொடுத்தனர். அதனால் 31/4 என திண்டாடிய இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியான நிலையில் ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி நங்கூரமாகவும் நிதானமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு 113 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிய இந்தியாவை தூக்கி நிறுத்தினார்.

அபார சாதனைகள்:
அதனால் வெற்றியை நெருங்கிய இந்தியாவுக்கு கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா 40 (37) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுக்க 3வது பந்தில் 2 ரன்களை எடுத்த விராட் கோலி 4வது பந்தில் சிக்ஸர் பறக்க விட்டார். அதிர்ஷ்டவசமாக அந்த பந்து இடுப்பளவு வந்ததால் நோ-பால் வழங்கப்பட்டது. அதை மீண்டும் வீசிய நவாஸ் ஒயிட் போட்டார். அதற்கடுத்த பந்தில் விராட் கோலி கிளீன் போல்ட்டானாலும் பிரீ ஹிட் என்பதை பயன்படுத்தி 3 ரன்களை எடுத்த இந்தியாவுக்கு அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.

Virat Kohli Rohit Sharma

அடுத்த பந்து மீண்டும் ஒய்டாக வீசப்பட்ட நிலையில் கடைசி பந்தில் தமிழகத்தின் அஸ்வின் லாவகமாக தூக்கி அடித்து 20 ஓவரில் 160/6 ரன்களை எடுக்க வைத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார். அதனால் கடந்த உலக கோப்பையில் வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு இம்முறை பதிலடி கொடுத்து பழிதீர்த்த இந்தியாவின் வெற்றிக்கு சிம்ம சொப்பனமாக நின்று 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார். கடைசி 6 இன்னிங்ஸ்சில் 49, 55*, 57, 35, 60, 82* என பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதுமே டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் அந்நாட்டை ஆளப்பிறந்தவராக தன்னை நிரூபித்து வருகிறார்.

- Advertisement -

1. அதற்கு மற்றுமொரு சான்றாக பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை உலகக் கோப்பையில் மட்டும் 501 ரன்கள் குவித்துள்ள அவர் டி20 உலக கோப்பை வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக 500 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 501* – பாகிஸ்தானுக்கு எதிராக
2. ஏபி டிவில்லியர்ஸ் : 458 – வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக
3. மகிளா ஜெயவர்தனே : 424 – நியூசிலாந்துக்கு எதிராக

2. அதுபோக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற 2வது வீரர் என்ற சனத் ஜெயசூரியாவின் சாதனையையும் தகர்த்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 79
2. விராட்கோலி : 59*
3. சனத் ஜெயசூர்யா : 58

- Advertisement -

3. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார். அந்தப் பட்டியல்:
1. விராட் கோலி : 14*
2. முகமது நபி : 13
3. ரோஹித் சர்மா : 12Virat Kohli 122

4. அத்துடன் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 6*
2. ஷேன் வாட்சன்/கிறிஸ் கெய்ல்/மகிளா ஜெயவர்தனே : தலா 5

5. மேலும் 20 ஓவர், 50 ஓவர் என அனைத்து உலக கோப்பைகளிலும் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் இதுவரை 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் ஐசிசி உலக கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற உலக சாதனை படைத்தார். அவரை தவிர்த்து யுவராஜ் சிங் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), சச்சின் டெண்டுல்கர் (பாகிஸ்தானுக்கு எதிராக), ஏபி டிவில்லியர்ஸ் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக), சவுரவ் கங்குலி (கென்யாவுக்கு எதிராக), ரோகித் சர்மா (வங்கதேசத்துக்கு எதிராக) ஆகியோர் அதிகபட்சமாக 3 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளனர்.

6. அதைவிட இப்போட்டியில் 82 ரன்கள் குவித்த அவர் அனைத்து விதமான ஐசிசி உலக கோப்பைகளையும் சேர்த்து அதிக முறை 50+ ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்து புதிய உலகசாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. விராட் கோலி : 24*
2. சச்சின் டெண்டுல்கர் : 23
3. ரோகித் சர்மா : 22

7. அத்துடன் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 5வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனையை பாண்டியாவுடன் இணைந்து படைத்தார். அந்தப் பட்டியல்:
1. விராட் கோலி – ஹர்திக் பாண்டியா : 113, 2022*
2. எம்எஸ் தோனி ரோகித் சர்மா : 85, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2007

Advertisement