விட்டா உலக கோப்பையையே ஃப்ரீயா கேப்பிங்க போல – இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி

INDvsPAK-1
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரை 1987, 2011 ஆகிய வருடங்களில் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக தற்போது முழுக்க முழுக்க தங்கள் நாட்டிலேயே நடத்த உள்ளது. அதனால் நிறைய வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் இந்திய ரசிகர்களிடம் பொதுவாகவே சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா 2011 போல சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதை விட இந்த தொடரில் பரம எதிரியான பாகிஸ்தான் விளையாடுமா என்ற சந்தேகம் நீடித்து வருகிறது. ஏனெனில் எல்லை பிரச்சினை காரணமாக ஏற்கனவே இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டுமே இவ்விரு நாடுகளும் மோதி வருகின்றன. அந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களால் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காது என அறிவித்த ஜெய் ஷா அதை பொதுவான இடத்தில் நடத்துவோம் என்று கூறினார்.

- Advertisement -

ஃபிரீயா கேப்பிங்க போல:
அதற்கு எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் உங்கள் நாட்டில் நடைபெறும் உலக கோப்பையை நாங்களும் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. இருப்பினும் இருநாட்டுக்கும் சமமாக பாகிஸ்தான் பங்கேற்கும் 4 லீக் போட்டிகளை அந்நாட்டிலும் இந்தியா பங்கேற்கும் போட்டிகளை இலங்கையிலும் நடத்துவதற்கு ஆசிய கவுன்சில் அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் திருப்தியடையாத பாகிஸ்தான் வாரியம் தங்களுக்கு சவாலை கொடுத்து வரும் இந்திய அரசின் தலைவர்களை கொண்ட குஜராத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியை பாதுகாப்பு காரணங்களால் வேறு மைதானத்திற்கு மாற்றினால் மட்டுமே பங்கேற்போம் என மீண்டும் அடம் பிடித்தது.

அதை விட தங்களுடைய மற்றொரு பரம எதிரியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் போட்டியை சென்னையிலிருந்து வேறு கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றுமாறும் அந்நாட்டு வாரியம் கோரிக்கை வைத்தது. ஏனெனில் சுழலுக்கு சாதகமான வரலாற்றை கொண்ட சேப்பாக்கத்தில் ரஷித் கான், முஜீப் உர் ரகுமான், நூர் அஹ்மத் தரமான ஸ்பின்னர்களைக் கொண்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடினால் தோற்று விடுவோம் என்று கருதும் அந்த அணி அப்போட்டியை பெங்களூருவுக்கு மாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்தது.

- Advertisement -

அதை பார்த்த இந்திய ரசிகர்கள் அப்படியானால் உங்களுக்கு தரமான சுழலை எதிர்கொள்ள தெரியாதா? என்று பாகிஸ்தானை கலாய்த்தனர். இந்நிலையில் கிட்டத்தட்ட உலகக் கோப்பைக்கான அனைத்து மைதானங்கள் மற்றும் தேதிகளை உறுதி செய்து மாதிரி அட்டவணை தயாரிக்கப்பட்டு தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடைசி நேரத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என பாகிஸ்தான் வாரியத்தின் இந்த கோரிக்கைகளை ஐசிசி நிராகரித்து விட்டதாக பிரபல கிரிக்பஸ் இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக இன்னும் ஒரு வாரத்தில் மும்பையில் நடைபெறும் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் 2023 உலகக்கோப்பைக்கான அட்டவணையை வெளியிடுவதற்கு பிசிசிஐ அனைத்து ஏற்பாடுகளும் செய்து வரும் நிலையில் இது போன்ற நியாயமற்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது என ஐசிசி தெளிவாக கூறியுள்ளது. பொதுவாக உலக கோப்பையில் உலகம் முழுவதிலும் இருக்கும் பல்வேறு நாடுகள் எந்த மாதிரியான மைதானங்கள் கொடுக்கப்பட்டாலும் அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அனைத்து அணிகளையும் வீழ்த்தி கோப்பையை வென்றால் மட்டுமே சாம்பியனாக அங்கீகரிக்கப்படுவார்கள்.

இதையும் படிங்க:22 வருஷ மானத்தை கப்பல் ஏத்தாம இதெல்லாம் மூட்டை கட்டுங்க, இங்கிலாந்து அணியை விளாசிய – நாசர் ஹுசைன்

அப்படிப்பட்ட நிலையில் கொடுக்கப்படும் மைதானங்களில் விளையாடி தரத்தை காண்பித்து வெற்றி பெறுவதை விட்டு விட்டு அதை வேறு மைதானங்களுக்கு மாற்றுங்கள் என்று கேட்ட பாகிஸ்தான் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது. அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் விட்டால் பாகிஸ்தான் விளையாடாமலேயே இலவசமாக உலக கோப்பையை கேட்கும் என்று கலாய்கின்றனர்.

Advertisement