22 வருஷ மானத்தை கப்பல் ஏத்தாம இதெல்லாம் மூட்டை கட்டுங்க, இங்கிலாந்து அணியை விளாசிய – நாசர் ஹுசைன்

Nasser Hussain
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. அந்த போட்டியில் முதல் நாளிலேயே அதிரடியாக செயல்பட்டு 393/8 ரன்கள் குவித்த இங்கிலாந்து ஜோ ரூட் 118* ரன்கள் எடுத்து களத்தில் இருந்ததால் எக்ஸ்ட்ராவாக 40 – 50 ரன்கள் எடுக்கும் வாய்ப்பை தவற விட்டு தைரியமாக டிக்ளேர் செய்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

அதே போல் 2வது இன்னிங்ஸில் வெறும் 7 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற போது பொறுப்புடன் செயல்பட வேண்டிய அந்த அணி கொஞ்சமும் அதிரடியை குறைக்காமல் எங்களது ஸ்டைலில் தான் விளையாடுவோம் என்று அடம் பிடித்து வெறும் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 300 ரன்களை கூட இலக்காக நிர்ணயிக்கத் தவறியது தோல்விக்கு மற்றொரு காரணமாக அமைந்தது. மறுபுறம் சமீபத்தில் இந்தியாவை தோற்கடித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் கோப்பையை வென்ற சாதனை படைத்த ஆஸ்திரேலியா அதிகப்படியான தன்னம்பிக்கையுடன் செயல்பட்ட இங்கிலாந்தின் சொதப்பல்களை பயன்படுத்தி சிறப்பான வெற்றி பெற்றது.

மூட்டை கட்டுங்க:
முன்னதாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஜோ ரூட்டுக்கு பின் பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான ஆட்டத்தை இங்கிலாந்தில் புகுத்தினர். அதன் பயனாக இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி தொடர் வெற்றிகளை பெற்ற இங்கிலாந்தின் புதிய அணுகுமுறை பஸ்பால் என்று அந்நாட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

Ben Stokes

மேலும் இந்த அணுகுமுறையால் வெளிநாட்டு மண்ணில் சாதிக்க முடியுமா என்று எழுந்த விமர்சனங்களையும் கடந்த டிசம்பரில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் துவம்சம் செய்த இங்கிலாந்து அந்த அதிரடி பாதையை தொடரலாம் என்று போலியான தன்னம்பிக்கை பெற்றது என்றே சொல்லலாம். ஏனெனில் பெரும்பாலும் தார் ரோட் போல இருந்த பிட்ச்களில் சுமாராக செயல்பட்ட பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய அந்த அணி கடந்த பிப்ரவரியில் தரமான நியூசிலாந்திடம் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் இதே அணுகு முறையால் தோற்றது.

- Advertisement -

அந்த வரிசையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரசிகர்களை மகிழ்விக்கிறோம் என்ற பெயரில் டி20 ஆட்டத்தை வெளிப்படுத்தும் இங்கிலாந்துக்கு தற்போது ஆஸ்திரேலியா பாடம் புகட்டியுள்ளது என்று நிறைய ரசிகர்கள் சொல்லுகின்றனர். மேலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த டி20 இருக்கும் நிலையில் பழமையான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மதிப்பு கொடுக்காமல் விளையாடிய இங்கிலாந்து தோல்வியை சந்திக்க தகுதியானது என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பஸ்பால் உள்ளிட்ட எந்த அதிரடியையும் பின்பற்றாமலேயே 2001 முதல் 22 வருடங்களாக இங்கிலாந்து தன்னுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து டெஸ்ட் தொடரில் வீழ்த்தி வருவதை நினைவில் கொள்ள வேண்டுமென தங்களுடைய அணியை முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் விமர்சித்துள்ளார். எனவே இந்த புதிய ஸ்டைலை மூட்டை கட்டி விட்டு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மதிப்பு கொடுத்து கௌரவமான ஆஷஸ் கோப்பையை வெல்லுமாறு எச்சரிக்கும் அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரசிகர்களை மகிழ்விக்கிறோம் என்ற பெயரில் நீங்கள் தோல்விக்கு பின் ஒளிந்து கொள்ள முடியாது. இந்த சமயத்தில் நான் ரிக்கி பாண்டிங் மனதை படிக்கிறேன். ஏனெனில் அவர் வின்னர். அத்துடன் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியையும் 1 ரன்னில் இங்கிலாந்து தோற்றதை மறக்கக்கூடாது. அந்த தோல்விக்கு பின் அயர்லாந்தை மட்டுமே அவர்கள் எதிர்கொண்டு எளிதாக வென்றனர். எனவே கடந்த 2 முறை அவர்கள் வெல்ல வேண்டிய போட்டிகளில் தோற்றனர்”

hussain

இதையும் படிங்க:இந்த புகைப்படத்தில் தோனியின் இடதுபுறம் இருக்கும் நபர் யார் தெரியுமா? – அவர்கள் இருவருக்கும் இடையே இப்படி ஒரு உறவா?

“இந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவை நாங்கள் பழைய ஸ்டைலிலேயே 2001 முதல் தொடர்ந்து இங்கிலாந்தில் தோற்கடித்து வருகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எங்களுக்கு ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க பஸ்பால் தேவையில்லாமல் இருந்தது. மறுபுறம் தரமான கடினமான வீரர்களை கொண்டுள்ள ஆஸ்திரேலியா தங்களை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் சாம்பியன் அணி என்பதை நிரூபித்துள்ளது” என்று கூறினார்.

Advertisement