- Advertisement -
உலக கிரிக்கெட்

நீங்க சொல்றத ஏத்துக்க முடியாது.. பி.சி.சி.ஐ-யின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோரிக்கையை நிராகரித்த ஐ.சி.சி – என்ன நடந்தது?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் மீதான வரவேற்பை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கொண்டு வருவதற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை கடந்த 2021-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளை போன்றே டெஸ்ட் போட்டிகளுக்காக நடத்தப்படும் இந்த சாம்பியன்ஷிப் தொடர் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது. இதனால் அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் இன்னும் வரவேற்பினை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பி.சி.சி.ஐ-யின் கோரிக்கையை நிராகரித்த ஐ.சி.சி :

அந்த வகையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் இறுதிப் போட்டியானது கடந்த 2021-ஆம் ஆண்டு சவுத்தாம்டன் நகரில் நடைபெற்றது. அதற்கடுத்து இரண்டாம் முறை 2023-ஆம் ஆண்டு ஓவல் மைதானத்திலும், தற்போது இந்தாண்டு மூன்றாவது முறையாக நடைபெற்ற இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்திலும் நடைபெற்றது.

- Advertisement -

இப்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்று இறுதிப் போட்டிகளுமே இங்கிலாந்தில் நடத்தப்பட்டிருப்பது பலரது மத்தியிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனெனில் அடுத்ததாக வரவிருக்கும் 2027, 2029 மற்றும் 2031 ஆகிய ஆண்டுகளிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இங்கிலாந்திலேயே நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் புதிய ஒப்பந்தத்திலும் ஐ.சி.சி கையொப்பமிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியை இந்தியாவில் ஒருமுறை நடத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி-யிடம் வேண்டுகோள் வைத்தது.

- Advertisement -

ஆனால் பி.சி.சி.ஐ-யின் இந்த வேண்டுகோளை நிராகரித்துள்ள ஐசிசி அடுத்த மூன்று சுழற்சிகளிலும் இங்கிலாந்திலேயே அந்த இறுதிப்போட்டியை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்தில் தான் ஜூன் மாதம் சிறந்த வானிலை இருக்கிறது. அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி எவ்வித தடையும் இல்லாமல் நடைபெறும்.

இதையும் படிங்க : இங்கிலாந்தில் நிதிஷ் ரெட்டி வேணாம்.. அவரை செலக்ட் பண்ணுங்க.. கம்பீருக்கு ஹர்பஜன் அட்வைஸ்

மற்ற நாடுகளில் வானிலை மற்றும் இதர சூழல் காரணமாக சில பாதிப்புகள் இருப்பதால் இங்கிலாந்து நாடே சிறந்த இடமாக ஐசிசி கருதுகிறது. அதுமட்டும் இன்றி இங்கிலாந்தில் நடத்தப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கு அதிகப்படியான ரசிகர்கள் கூட்டமும் இருப்பதனாலே ஐசிசி அங்கேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியை நடத்த விரும்புகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -