- Advertisement -
இந்திய கிரிக்கெட்

12 மாதத்தில் 2வது முறை.. அவ்வளவு வெறித்தனமா? லார்ட்ஸில் விதிமுறை மீறிய சிராஜ்க்கு ஐசிசி 2 தண்டனை

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய அந்தப் போட்டியில் கடைசி நாளில் வெற்றி பெற இந்தியாவுக்கு 135 ரன்களும் இங்கிலாந்துக்கு 6 விக்கெட்டுகளும் தேவைப்படுகிறது. அதில் வெற்றி பெற்று சமநிலையில் இருக்கும் இத்தொடரில் முன்னிலைப் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அந்தப் போட்டியின் மூன்றாவது நாள் மாலையில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார். அதனால் இந்திய கேப்டன் சுப்மன் கில் அவருடன் வாக்குவாதம் செய்தது பரபரப்பை உண்டாக்கியது. அதே போல 4வது நாள் காலையில் இங்கிலாந்து துவக்க வீரர் பென் டக்கெட் விக்கெட்டை இந்தியாவின் முகமது சிராஜ் எடுத்தார்.

- Advertisement -

அவ்ளோ வெறித்தனமா:

அப்போது பென் டக்கெட் முகத்துக்கு முன்னே சென்ற சிராஜ் 3 முறை வெறித்தனமாகக் கத்தி விக்கெட்டை கொண்டாடினார். அப்படி கொண்டாடி முடிக்கும் போது ஏமாற்றத்துடன் செல்லத் துவங்கிய டக்கெட் தோளில் அவருடைய தோள் லேசாக உரசியது. அதனால் இப்படியெல்லாம் கொண்டாடக்கூடாது என்று சொல்லி சிராஜை களத்திலேயே நடுவர் லேசாக எச்சரிக்கை செய்தார்.

இந்நிலையில் அந்த செய்கையால் 2.5 விதிமுறையை சிராஜ் மீறியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. குறிப்பாக “மொழி, செயல்கள் அல்லது சலுகைகளை பயன்படுத்தி ஒரு சர்வதேச போட்டியின் போது இழிவுபடுத்தும் வகையில் ஒருவர் வெளியேற்றப்பட்டால் ஆக்ரோஷமான எதிர்ப்பினையை தூண்டலாம்” என்ற விதிமுறையை சிராஜ் மீறியுள்ளார். எனவே அவருக்கு இப்போட்டியின் சம்பளத்திலிருந்து 15% அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

- Advertisement -

ஐசிசி நடவடிக்கை:

அது போக சிராஜ்க்கு ஒரு கருப்பு புள்ளியையும் ஐசிசி தண்டனையாகக் கொடுத்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆஸ்திரேலிய தொடரில் டிராவிஸ் ஹெட்டுடன் மோதியதால் அவருக்கு ஒரு கருப்பு புள்ளி தண்டனையாக கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது இதையும் சேர்த்து சிராஜ் கடந்த 12 மாதங்களுக்குள் இரண்டாவது கருப்பு புள்ளியை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: ஒவ்வொரு பந்துக்கும் உசுர கொடுத்து வீசுறாரு.. இந்திய பந்துவீச்சாளர் குறித்து – கெவின் பீட்டர்சன் பாராட்டு

பொதுவாக ஒரு வீரருக்கு அதிகபட்சமாக 24 மாதங்களில் 4 கருப்பு புள்ளிகள் அனுமதிக்கப்படும். அந்த எண்ணிக்கை தாண்டும் போது அந்த குறிப்பிட்ட வீரருக்கு ஒரு சர்வதேச போட்டியில் விளையாட தாமாக தடை விதிக்கப்படும். எனவே சிராஜ் இனிமேல் கொஞ்சம் அமைதியாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இதைத் தொடர்ந்து கடைசி நாளில் இந்தியா 135 ரன்கள் எடுத்து சரித்திர வெற்றியைப் பெற முயற்சிக்க உள்ளது.

- Advertisement -