ஒவ்வொரு பந்துக்கும் உசுர கொடுத்து வீசுறாரு.. இந்திய பந்துவீச்சாளர் குறித்து – கெவின் பீட்டர்சன் பாராட்டு

Kevin Pietersen
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.

இந்திய வேகப்பந்து வீச்சாளரை பாராட்டிய : கெவின் பீட்டர்சன்

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூலை 10-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற இருக்கும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை என்பதால் இந்த கடைசி நாள் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி சார்பாக பந்துவீச்சு யூனிட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை வாழ்த்தி அவரை பாராட்டி முன்னாள் இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சன் சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

ஒரு கிரிக்கெட் வீரராக முகமது சிராஜை நான் மிகவும் விரும்புகிறேன். அவரை கடந்த சில காலங்களாகவே எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஏனெனில் எப்போது அவர் பந்து வீசினாலும் தனது முழு அர்ப்பணிப்பையும் வழங்கி ஒவ்வொரு பந்தையும் வீசுகிறார். கிரிக்கெட் மீது ள்ள அவரது அன்பு என்னை வியக்க வைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பந்தையும் அவர் வீசும் போதும் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் முழு மனதுடன் அந்த பந்திற்கு கொடுக்கிறார்.

- Advertisement -

கொஞ்சமும் எளிதாக விட்டுக் கொடுக்க முடியாமல் முழு உத்வேகத்துடன் செயல்படுகிறார். இப்படி ஒரு வீரர் கேப்டனின் கனவு வீரர் என்று கூறுவேன் என முகமது சிராஜை கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க : தற்போதைக்கு இதுதான் நிலைமை.. இந்தியா ஜெயிக்கணும்னா அந்த 2 பேரால் தான் முடியும் – அஷ்வின் கருத்து

கடந்த மூன்று போட்டிகளாகவே மிக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் முகமது சிராஜ் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் என சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய அணியின் ஆதிக்கத்திற்கு மிக முக்கியமான காரணமாகவும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement