இதெல்லாம் ஒரு குத்தமா? பும்ராவுக்கு ஐசிசி வழங்கிய அதிரடி தண்டனை.. காரணம் என்ன?

Jasprit Bumrah
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்கியது. ஹைதராபாத் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் அந்தப் போட்டியில் இங்கிலாந்தை விட முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா கடைசியில் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

குறிப்பாக முதல் 3 நாட்கள் சிறப்பாக விளையாடி வெற்றியை கையில் வைத்திருந்த இந்தியா 4வது நாளில் இங்கிலாந்து நிர்ணயித்த 231 ரன்கள் சேசிங் செய்ய முடியாமல் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா லெவல் 1 விதிமுறையை மீறியதாக ஐசிசி அறிவித்துள்ளது.

- Advertisement -

ஐசிசி தண்டனை:
குறிப்பாக ஒரு சர்வதேச போட்டியின் போது எதிரணி வீரர், நடுவர் அல்லது ஏதேனும் ஒரு நபருடன் உடல் ரீதியாக மோதக்கூடாது என்ற எண் 2.12 அடிப்படை விதிமுறையை பும்ரா மாறியுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது. எனவே பும்ராவுக்கு ஒரு கேரியர் கருப்பு புள்ளி தண்டனையாக கொடுக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதாவது ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் போது பும்ரா வீசிய 81வது ஓவரின் ஒரு பந்தை எதிர்கொண்ட ஓலி போப் அதை அடித்து விட்டு சிங்கிள் எடுக்க ஓடினார்.

அப்போது தம்மை அறியாமலேயே கிட்டதட்ட ஓலி போப் ஓடி வரும் வழியில் பும்ரா நின்றார். மறுபுறம் பந்தை பார்த்துக்கொண்டே ஓடிவந்த போப் கடைசி நேரத்தில் பும்ரா இருப்பதை பார்த்து ஒதுங்கி ஓடினார். ஆனாலும் பும்ராவின் தோள்பட்டை அவர் மீது லேசாக உரசி விட்டது. இறுதியில் இருவரும் மோதிக் கொள்ளாமல் போட்டி நடைபெற்ற முடிந்தது.

- Advertisement -

இருப்பினும் அந்த இடத்தில் பும்ரா வேண்டுமென்றே ஓலி போப் ஓடிய வழியில் குறுக்கே சென்று மோதியதாக போட்டியின் நடுவர்கள் புகார் செய்தனர். அதை ஏற்றுக் கொண்டு சோதித்துப் பார்த்த ஐசிசி தற்போது பும்ராவுக்கு இந்த தண்டனையை வழங்கியுள்ளது. பொதுவாக இந்த விதிமுறையை மீறுபவருக்கு 50% அபராதம் மற்றும் 2 கருப்பு புள்ளிகள் வழங்கப்படும் என்று ஐசிசி கூறியுள்ளது.

இதையும் படிங்க: கடைசி சான்ஸ்.. புஜாரா ரெடியா இருக்காரு.. தோல்விக்கு காரணமான இந்திய வீரரை எச்சரித்த கும்ப்ளே

ஆனால் நடந்த 24 மாதங்களில் பும்ரா எந்த விதிமுறைகளையும் மீறாமல் நன்னடத்தையுடன் விளையாடியதன் காரணமாக அபராதமின்றி 1 கருப்புப்புள்ளி மட்டும் கொடுக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. அதை பும்ரா ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு விசாரணை எதுவும் நடத்தப்படாது என்றும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் லேசாக உரசியது குத்தமா? என்று ஐசிசி மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement