கடைசி சான்ஸ்.. புஜாரா ரெடியா இருக்காரு.. தோல்விக்கு காரணமான இந்திய வீரரை எச்சரித்த கும்ப்ளே

Anil Kumble 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக துவங்கியுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்யாசத்தில் தோற்றது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை விட இந்தியா தங்களது முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றது. அதனால் கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 4வது நாளில் இங்கிலாந்து நிர்ணயித்த 231 ரன்கள் இலக்கை சேசிங் செய்ய முடியாமல் தோற்றது.

இந்த தோல்விக்கு பேட்டிங் துறையில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சுமாராக செயல்பட்டது ஒரு காரணமாக அமைந்தது. குறிப்பாக சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் கில் அந்த போட்டியில் 23, 0 ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்து தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

- Advertisement -

புஜாரா இருக்காரு:
அதனால் அவரை அணியிலிருந்து நீக்குமாறு நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் 100 போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்க புஜாரா தடுமாறி வரும் சுப்மன் கில்லுக்கு பதிலாக விளையாட 2024 ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதமடித்து ஃபார்முக்கு திரும்பி தயாராக இருப்பதாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். எனவே 2வது போட்டியில் அசத்த தவறினால் உங்களின் இடம் கேள்விக்குறியாகும் என்று கில்லை எச்சரிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

“அவர் மிகவும் சுதந்திரமாக விளையாடி ரன்கள் எடுக்க வேண்டும். கடினமான கைகளை பயன்படுத்தி விளையாடும் டெக்னிக்கை வைத்திருப்பதால் சுழலை சமாளிப்பதற்கு தேவையான தனது சொந்த திட்டத்தை அவர் தான் கொண்டு வர வேண்டும். ஏனெனில் பந்து நேராக வரும் போது அவருடைய டெக்னிக் எந்த பிரச்சினையையும் கொடுக்காது. ஆனால் பந்து திரும்பும் போது நீங்கள் உங்களுடைய கைகளை பயன்படுத்தி ஷாட்டுகளை சோதிக்க வேண்டும்”

- Advertisement -

“இது அவர் வேலை செய்ய வேண்டிய ஒன்றாகும். அடுத்த போட்டிக்கு முன்பாக இருக்கும் 4 நாட்களை பயன்படுத்தி உங்களின் திறமையை மேம்படுத்த முடியுமா? என்பதை பார்க்க வேண்டும். சுப்மன் கில் அதை செய்வதற்கு உதவியாக ராகுல் டிராவிட் இருக்கிறார். இங்கே புஜாராவுக்கு கிடைக்காத மெத்தை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் புஜாரா 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார். கடைசியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவர் விளையாடியுள்ளார்”

இதையும் படிங்க: எங்க அப்பா தான் முக்கியம்னு அவர்கூட இருந்தேன்.. இப்போ நான் ரெடி.. அடுத்த டார்கெட் குறித்து பேசிய – தீபக் சாஹர்

“இந்தியாவுக்காக புஜாரா விளையாடி நீண்ட காலங்கள் ஆகவில்லை. அதனால் புஜாரா விளையாடிய 3வது இடத்தில் குறிப்பாக இந்திய மண்ணில் அசத்துவதற்கு உங்களுடைய ஆட்டத்தில் நீங்கள் வேலை செய்ய வேண்டும். இளம் வீரராக இருக்கும் அவர் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறார். ஆனால் அதை விசாகப்பட்டினத்தில் அவர் செய்ய வேண்டும். இல்லையேல் அவர் மீது அழுத்தம் அதிகரித்து விடும்” என்று கூறினார்.

Advertisement