ஒன்னும் பண்ண முடியாது, ஐசிசி’ன்னா இந்தியன் கிரிக்கெட் கவுன்சில் – இந்தியாவை நேரடியாக தாக்கிய முன்னாள் பாக் வீரர்

Jay Shah IND vs PAk
- Advertisement -

2023 ஆசியக் கோப்பை விவகாரம் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே அனல் பறந்து வருகிறது. எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை மொத்தமாக நிறுத்தி விட்ட இந்தியா ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகிறது. அந்த நிலைமையில் எல்லை பிரச்சினை காரணமாக இந்திய அரசின் அனுமதியில்லாமல் பாகிஸ்தானுக்கு பயணித்து 2023 ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தத்தை கொடுப்போம் என்றும் கூறினார்.

ஆனால் ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் நீங்கள் இவ்வாறு பேசியது ஏமாற்றத்தை கொடுப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் உங்களுக்கு நாட்டில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் ஆசிய கவுன்சிலில் கிடைக்கும் வருமானத்தை இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பங்கு போடும் நிலையில் இந்தியா மட்டும் நிதியுதவி வழங்கும் நாடாக இருக்கிறது.

- Advertisement -

இந்தியன் கவுன்சில்:
அதே போலவே சர்வதேச கிரிக்கெட்டை நடத்தும் ஐசிசிக்கும் உலகின் இதர நாடுகளை காட்டிலும் இந்தியா தான் அதிகப்படியான வருமானத்தை சம்பாதித்து கொடுக்கிறது. அதனால் இந்த விவகாரத்தில் பிசிசிஐயை எதிர்த்து ஐசிசி எதுவும் செய்யாது என்றும் ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் ஜெய் ஷா எடுக்கும் முடிவே இறுதியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அத்துடன் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை புறக்கணித்தால் அதற்காக ஐசிசியிடம் இருந்து கிடைக்க வேண்டிய பங்கு பணமும் பாகிஸ்தானுக்கு கிடைக்காது.

அதனால் இந்த விவகாரத்தில் வாயில் பேசினாலும் செயலில் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனமாகும். அதனாலேயே தற்போதைய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் உணர்ச்சிபூர்வமான முடிவை எடுக்கக் கூடாது என்று ஷாஹித் அப்ரிடி ஏற்கனவே நிதர்சனமாக பேசியிருந்தார். இந்நிலையில் ஐசிசி என்பது இந்தியன் கிரிக்கெட் கவுன்சில் போல செயல்படுவதால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துர் ரஹ்மான் இந்தியாவுக்கு சென்று உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

அத்துடன் பணத்தால் சாதிக்கும் இந்தியாவை நாம் களத்தில் சிறப்பாக செயல்பட்டு தோற்கடித்து சாதித்து காட்ட வேண்டும் என்று நேரடியாக தாக்கும் வகையில் பேசியுள்ள அவர் இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “இந்த விவகாரத்தில் எதுவும் நமக்கு சாதகமாக நடக்காது. ஏனெனில் ஐசிசி இந்தியாவுக்கு கீழே உள்ளது” என்று கூறினார். அப்போது குறுகிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் அப்படியானால் ஐசிசி என்றால் இந்தியன் கிரிக்கெட் கவுன்சில் என்று சில ரசிகர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து அவர் தொடர்ந்து பேசியது பின்வருமாறு.

“ஆம் நிச்சயமாக. ஐசிசியில் வேலை செய்யும் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். ஐசிசிக்கு 60 – 70% நிதி இந்தியாவால் உருவாக்கி கொடுக்கப்படுகிறது. எனவே பாகிஸ்தான் நிச்சயமாக இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் சென்று பங்கேற்க வேண்டும். ஏனெனில் நாம் உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறோம். அதற்கு முடியாது என்று சொல்ல முடியாத நிலைமையில் நாம் இருக்கிறோம். ஒருவேளை பாகிஸ்தானுக்கு இந்தியா வர விரும்பவில்லை என்றால் நல்லது. ஆனால் நாம் இந்தியாவுக்கு சென்று அவர்களுக்கு சிறந்த கிரிக்கெட்டை விளையாடி அவர்களுக்கு தோல்வியை பரிசாகவும் பதிலடியாகவும் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து சுப்மன் கில்லை மிரளவைத்த தல தோனி – டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை

முன்னதாக 2023 பிஎஸ்எல் தொடரில் கராச்சி மைதானத்தின் அருகே ஒரு போட்டியின் போது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகள் நடந்ததால் நிச்சயமாக அங்கு ஆசிய கோப்பையும் நடைபெறாது இந்தியாவும் பாகிஸ்தானுக்கு பயணிக்காது என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement