சம்பள பிரச்சனையில் இது வேறையா? நொந்து போயிருக்கும் பாகிஸ்தானுக்கு ஐசிசி கொடுத்த தண்டனை

Babar Azam PAk
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 1992 போல கோப்பையை வென்று இந்தியாவில் கெத்து காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் முதல் 6 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்த பாகிஸ்தான் இத்தொடரில் நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் இந்தியாவுக்கு எதிராக வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக அவமான தோல்வியை பதிவு செய்தது.

அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சுமாராக செயல்பட்டு வெற்றியை தாரை வார்த்த அந்த அணி கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக தோல்வியை சந்தித்து. அதன் காரணமாக செமி ஃபைனல் செல்ல வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அந்த அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போட்டியிலும் போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

- Advertisement -

ஐசிசியின் தண்டனை:
இதன் காரணமாக எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது 90% உறுதியாகியுள்ளதால் பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட மிகவும் மெதுவாக பந்து வீசியது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி 4 ஓவர்களை பாகிஸ்தான் அணியினர் மெதுவாக வீசியுள்ளனர்.

அதைப் போட்டி நடுவர்கள் புகார் செய்ததை ஐசிசி ஏற்றுக்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஓவருக்கும் தலா 5% வீதம் 4 ஓவர்களுக்கு மொத்தம் 20% பாகிஸ்தான் அணியினருக்கு அபராதமாக விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை கேப்டன் பாபர் அசாம் ஒப்புக்கொண்டுள்ளதால் மேற்கொண்டு எவ்விதமான விசாரணைகளும் நடத்தப்படாது என்றும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் தங்களுடைய போட்டி சம்பளத்திலிருந்து 20 சதவீதத்தை அபராதமாக செலுத்த உள்ளனர். முன்னதாக கடந்த 5 மாதங்களாக பாகிஸ்தான் வாரியம் சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்தால் எப்படி வீரர்களால் களத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என்று முன்னாள் கேப்டன் ரசித் லதீப் நேற்று ஊடகங்களில் மிகப்பெரிய உண்மையை உடைத்து பேசினார்.

இதையும் படிங்க: ஆஸியிடம் அடி வாங்குனாலும் கம்பேக் பண்ணிட்டோம்.. எங்களோட லட்சியமே வேற.. நெதர்லாந்து கேப்டன் உற்சாக பேட்டி

சொல்லப்போனால் இத்தொடரின் துவக்கத்தில் கடந்த 5 மாதங்களாக சம்பளம் கொடுக்காத நிலைமையில் பாகிஸ்தானுக்கு இலவசமாக விளையாட தயார் ஆனால் ஸ்பான்சர்சிப் நிறுவனங்களின் லோகோவை ஜெர்சியில் அணிந்து விளையாட முடியாது என்று அந்நாட்டு வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளி வந்திருந்தன. இந்த சூழ்நிலையில் ஏற்கனவே தொடர் தோல்விகளால் நொந்து போயுள்ள பாகிஸ்தான் அணியினர் கிடைக்காத சம்பளத்தில் 20% அபராதத்தை கட்ட வேண்டிய பரிதாப நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டது.

Advertisement