இந்தியா பாகிஸ்தான் தொடர் நடக்கணுனா இதுமட்டும் தான் ஒரேவழி – ஐ.சி.சி நிர்வாகி தகவல்

INDvsPAK
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பின் உச்சம் என்னவென்று நாம் அறிந்ததே. கிரிக்கெட் விளையாட்டில் பரம எதிரிகளாக களத்தில் மோதிக் கொள்ளும் இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் இவ்விரு அணிகளுக்கும் இடையே கிரிக்கெட் தொடர் அரசியல் பிரச்சினை காரணமாக நடைபெறுவதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதிக் கொள்கின்றன.

INDvsPAK

- Advertisement -

அவ்வாறு மோதிக்கொள்ளும் போது அந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் டி20 போட்டியினை பல கோடி ரசிகர்கள் கண்டு களித்தனர். இந்நிலையில் தொடர்ச்சியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெற வேண்டும் என்றும் பலர் தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்தியா பாகிஸ்தான் தொடர் நடைபெற வேண்டுமெனில் இந்த ஒரு வழி மட்டும் தான் உள்ளது என ஐசிசி சிஇஓ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தொடர் நடைபெறுவது இல்லை. இரண்டு அணிகளுக்கும் இடையே உள்ள அரசியல் பிரச்சினை காரணமாகவே கடந்த பல ஆண்டுகளாக தொடர் நடைபெறாமல் இருக்கிறது.

Shaheen-afridi

இவ்விரு அணிகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தி இருதரப்பு தொடர் நடைபெற வேண்டுமெனில் இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கலந்தாலோசித்து போட்டிகள் நடைபெறுவதை சம்மதித்து உறுதிசெய்ய வேண்டும். மேலும் இருநாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் இருதரப்பு தொடரில் மோதிக்கொள்ள சம்மதிக்கும் பட்சத்தில் ஐசிசி அவர்களுக்கான அட்டவணையை தொகுக்கும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே டீமின் அதே பிளானை நாங்களும் யூஸ் பண்ணி ஜெயிப்போம் – ஆஸி கேப்டன் பின்ச் பேட்டி

அதே போன்று ஐசிசி-யின் இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது 2021 முதல் 23 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கூட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர் எதிரில் மோதாது என்று கூறியுள்ளார். அதே வேளையில் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில் பொதுவான ஒரு மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ள ஒரு வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement