சி.எஸ்.கே டீமின் அதே பிளானை நாங்களும் யூஸ் பண்ணி ஜெயிப்போம் – ஆஸி கேப்டன் பின்ச் பேட்டி

Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இன்று நடைபெற இருக்கும் இந்த இறுதிப் போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

nzvsaus

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றும் என்ற காரணத்தினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் தாங்கள் எப்படி வெற்றி பெற விரும்புகிறோம் என்பது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த உலக கோப்பை தொடரில் சாம்பியன் அணியை டாஸ் முடிவு செய்யாது. இந்த உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை வெல்ல வேண்டுமானால் முதலில் பேட்டிங் செய்து ஜெயிக்க வேண்டும். டாஸில் தோற்றால் அதைப்பற்றி பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

wade 2

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை குவித்தது. அதன் பின்னரே எதிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. எனவே நாங்களும் அதே பாணியைப் பின்பற்றி முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவிக்கும் போது எதிரணி சேசிங்கின் போது தவறுகளைச் செய்யும்.

இதையும் படிங்க : நல்ல டேலன்ட் இருந்தும் இந்திய டி20 அணியில் இருந்து புறக்கணிப்பட்ட 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

அப்படி பெரிய இலக்கை விரட்டும் போது ஏற்படும் அழுத்தத்தினால் அவர்கள் தவறுகளை செய்து தோற்க வாய்ப்பு உண்டு. இதனால் நிச்சயம் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை எடுக்கும் பட்சத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவது சவாலாக இருக்கும் என்று ஆரோன் பின்ச் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement