நல்ல டேலன்ட் இருந்தும் இந்திய டி20 அணியில் இருந்து புறக்கணிப்பட்ட 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12-சுற்றோடு வெளியேறிய இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில் சில சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், ஆவேஷ் காரன், ஹர்ஷல் படேல் போன்ற வீரர்கள் வாய்ப்பினைப் பெற்று உள்ளனர்.

rohith

இந்நிலையில் நல்ல திறமை இருந்தும் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் மூன்று வீரர்களை பற்றி தான் இந்த தொகுப்பில் காண உள்ளோம். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஏற்கனவே ராகுல் மற்றும் ரோஹித் சிறப்பாக விளையாடி வருவதாலும் பேக்கப் ஆப்ஷனில் இஷான் கிஷன் இருப்பதாலும் மூன்று வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறாமல் தவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஷிகர் தவான் : இந்திய அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவன் ஏற்கனவே பல ஆண்டுகளாக ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கி வந்தவர். ஆனால் அண்மையில் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட இவருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் மீண்டும் இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கவில்லை.

Dhawan 1

சுப்மன் கில் : இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக விளையாடி வரும் சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடக் கூடியவர். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக இரண்டாவது பாதியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் இருப்பினும் அவருக்கு இன்னும் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை.

gill

மயங்க் அகர்வால் : டெஸ்ட் வீரராக மட்டுமே பார்க்கப்பட்டு வரும் அகர்வால் டி20 கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடக் கூடியவர். அதனை நாம் அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது பார்த்துள்ளோம். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கூட அட்டகாசமான ஒரு சதத்தை அவர் அதிரடியாக அடித்து இருந்தார். அதோடு ராகுலுடன் இணைந்து அவர் வெளிப்படுத்திய அதிரடியை நாம் கண்டுள்ளோம். இவர்கள் மூவருமே நல்ல திறமையான வீரர்களாக இருந்தும் துவக்க வீரர்களாக விளையாடுவதாலேயே இந்திய t20 அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement