CWC 2023 : மகா பிரபு நீங்க இங்கயும் வந்துடீங்களா? இங்கிலாந்து ரசிகருக்கு ஐ.சி.சி கொடுத்த மெகா தண்டனை

Jarvo
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சுமாராக செயல்பட்டு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 200 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா, இஷான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட டாப் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் விராட் கோலி 85, கேஎல் ராகுல் 97* ரன்களும் எடுத்து இந்தியாவுக்கு அசாத்தியமான வெற்றியை பெற்று கொடுத்தனர்.

- Advertisement -

ஐசிசி தண்டனை:
அந்த வகையில் தங்களுடைய உலகக்கோப்பை பயணத்தை திரில் வெற்றியுடன் இந்தியா துவங்கியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. முன்னதாக அப்போட்டி துவங்குவதற்கு முன்பாகவே ஜார்வோ எனும் ரசிகர் பாதுகாப்பு காவலர்களை தாண்டி மைதானத்திற்குள் உள்ளே புகுந்து போட்டியை நடத்த விடாமல் ரகளையில் ஈடுபட்டார்.

டேனியல் ஜார்விஸ் எனும் இங்கிலாந்தை சேர்ந்த அவர் யூடியூப் பக்கத்தில் 180000 பின்பற்றுபவர்களை கொண்டிருக்கிறார். அத்துடன் இங்கிலாந்தில் கடந்த 2021இல் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் மைதானத்திற்குள் நுழைந்த அவர் முதல் முறையாக சேட்டைகளை செய்தார். அதே போல இங்கிலாந்தில் நடைபெற்ற சில போட்டிகளில் உள்ளே புகுந்து தாமதத்தை ஏற்படுத்திய அவருக்கு அந்நாட்டு வாரியம் சில தண்டனைகளையும் கொடுத்தது.

- Advertisement -

அந்த நிலைமையில் 2023 உலகக் கோப்பைக்காக இங்கிலாந்திலிருந்து விசா பெற்று வந்த அவர் இந்தியாவின் முதல் போட்டியிலேயே உள்ளே நுழைந்த அவரை இங்கேயும் வந்து விட்டீர்களா மகாபிரபு என்று ரசிகர்கள் கிண்டல்டித்தனர். அத்துடன் வெளியே செல்லுமாறு வற்புறுத்திய காவலர்களிடம் அடம் பிடித்த அவரிடம் விராட் கோலி நேராக வந்து தொந்தரவு செய்யாமல் வெளியே செல்லுங்கள் என்று சொன்னார்.

இதையும் படிங்க: IND vs AFG : 2 ஆவது போட்டியிலும் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம்? – வெளியான முக்கிய அறிவிப்பு

இந்நிலையில் இப்படி அடிக்கடி உள்ளே நுழையும் அவருக்கு 2023 உலக கோப்பையில் மேற்கொண்டு எந்த போட்டியையும் பார்ப்பதற்கோ உள்ளே நுழைவதற்கோ தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொண்டு அவரை எந்த போட்டியிலும் அனுமதிக்கக்கூடாது என்று இந்தியாவில் இருக்கும் மைதான மைதான நிர்வாகங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தை தொடர்ந்து தற்போது இந்திய மைதானங்களிலும் நுழைவதற்கு ஜார்வோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement