IND vs AFG : 2 ஆவது போட்டியிலும் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம்? – வெளியான முக்கிய அறிவிப்பு

Gill
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2023-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி தங்களது முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த உலகக் கோப்பை பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. அதனை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி மைதானத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியின் முன்னணி இளம் நட்சத்திர துவக்க வீரரான சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் உலகின் இரண்டாம் நிலை வீரராக இருக்கும் சுப்மன் கில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாகவே மாறியது. ஏனெனில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு பதிலாக களமிறங்கிய இஷான் கிஷன் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

200 ரன்கள் என்கிற எளிய இலக்கு இருந்தும் தேவையில்லாத ஷாட் அடித்து இஷான் கிஷன் வெளியேறியது அனைவரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு சுப்மன் கில் இல்லாத குறையும் இந்த போட்டியில் தெரிந்ததாகவும் பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் சுப்மன் கில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டாலும் இந்திய அணி வீரர்களுடன் அவர் டெல்லி சென்றுள்ளார். தற்போது டெங்கு காய்ச்சலில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் வேளையில் தான் சண்டிகரில் உள்ள வீட்டிற்கு செல்ல விருப்பமில்லை என்றும் இந்திய அணியுடனே இருக்க விரும்புவதாகும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : IND vs AUS : நேத்து விராட் கோலி ஆடுன அந்த இன்னிங்க்ஸை பாத்து இளம்வீரர்கள் கத்துக்கனும் – கம்பீர பாராட்டு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை அவர் தவறவிட்டாலும் நிச்சயம் அதற்கடுத்து வரும் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணிக்கு அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டிக்கு அடுத்து அக்டோபர் 14-ஆம் தேதி தான் அடுத்த போட்டி என்பதனால் நிச்சயம் பாகிஸ்தானுக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் முக்கிய போட்டியில் அவர் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement