ரசிகர்களே ஓட்டு போடுங்க.. 2023 உ.கோ தொடர் நாயகன் யார்? டாப் 7 வீரர்களை பரிந்துரைத்த ஐசிசி

ICC Players
- Advertisement -

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களில் ரசிகர்கள் தங்களுடைய தொடர்நாயகன் வீரரை ஆன்லைன் வாயிலாக தேர்வு செய்யுமாறு ஐசிசி கேட்டுக் கொண்டுள்ளது.

ரசிகர்களின் நாயகன்:
அதற்காக ஐசிசி தங்களுடைய அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுத்துள்ள 9 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு.
1. விராட் கோலி: ஒரு உலகக் கோப்பையில் 700 ரன்கள் அடித்த முதல் வீரராக சாதனை படைத்து இந்திய வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வரும் இவர் இதுவரை 9 போட்டிகளில் 711* ரன்கள் எடுத்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை மிஞ்சிய அவர் ஃபைனலில் இந்தியாவுக்கு கோப்பையை வெல்வதற்காக களமிறங்க உள்ளார்.

- Advertisement -

2. ஆடம் ஜாம்பா: ஆஸ்திரேலியாவின் முதன்மை ஸ்பின்னராக செயல்பட்டு வரும் அவர் இந்திய மைதானங்களில் எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து 9 போட்டிகளில் 22* விக்கெட்டுகளை எடுத்து ஃபைனலுக்கு தகுதி பெறுவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
3. குயிண்டன் டீ காக்: தென்னாப்பிரிக்கா செமி ஃபைனலுக்கு தகுதி பெறுவதில் முக்கிய பங்காற்றிய இவர் தம்முடைய ஒருநாள் கேரியரில் கடைசி முறையாக இந்த உலகக்கோப்பையில் அதிரடியாக விளையாடி 594 ரன்கள் குவித்து ரசிகர்களின் பாராட்டுடன் விடை பெற்றார்.

4. முகமது ஷமி: முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்தாலும் அதன் பின் எதிரணிகளை தெறிக்க விட்ட இவர் 9 போட்டிகளில் 23* விக்கெட்டுகளை எடுத்து உலகக் கோப்பையில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்துள்ளார். அதே வேகத்தில் ஃபைனலிலும் இந்தியாவுக்கு கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளார்.
5. ரச்சின் ரவீந்தரா: சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை 23 வயதிலேயே உடைத்து நியூசிலாந்தின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள இவர் 578 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

6. கிளன் மேக்ஸ்வெல்: 91/7 என சரிந்த போது ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கி அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த இவர் ஆஸ்திரேலியா ஃபைனல் தகுதி பெறுவதில் முக்கிய பங்காற்றி 9 போட்டிகளில் 398* ரன்கள் மற்றும் 5* விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
7. ரோகித் சர்மா: தம்முடைய சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அடித்து நொறுக்கி இந்தியாவுக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்து வரும் இந்திய கேப்டனான இவர் 9 போட்டிகளில் 550* ரன்களை 124.15 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஃபைனலிலும் அசத்துவதற்கு காத்திருக்கிறார்.

இதையும் படிங்க: விராட் கோலியை விட அவர் தான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர்.. யுவராஜ் பாராட்டு

8. ஜஸ்ப்ரித் பும்ரா: இந்திய பவுலிங் துறையின் கருப்பு குதிரையான 9 போட்டிகளில் 18* விக்கெட்களை எடுத்துள்ளார். இவருடைய உச்சகட்ட செயல்பாடு ஃபைனலில் வெளிப்படும் என்று நம்பலாம்.
9. டார்ல் மிட்சேல்: தரமான பவுலிங்கை கொண்ட இந்தியாவுக்கு எதிராகவே லீக் மற்றும் செமி ஃபைனலில் சதமடித்த இவர் 552 ரன்கள் குவித்து நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டார்.

Advertisement