2023 – 2027 வரையிலான இந்திய அணியின் மொத்த கிரிக்கெட் போட்டிகளின் மெகா அட்டவணை இதோ

ICC
Advertisement

உலகம் முழுவதிலும் நடைபெறும் கிரிக்கெட்டை கட்டுக்கோப்புடன் நடத்திவரும் ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டில் தான் அனைத்து சர்வதேச போட்டிகளும் நடைபெறுகிறது. அந்த நிலைமையில் வரும் 2023 – 2027 வரையிலான காலகட்டத்தில் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளின் அடிப்படை கால அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. ஐபிஎல் போன்ற லீக் தொடர்களின் வருகையால் சர்வதேச கிரிக்கெட் அழியத் துவங்கியுள்ளதாக நிறைய முன்னாள் வீரர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அட்டவணை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் யாருமே கவலைப்படாத வகையில் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணியாத வகையில் இந்த கால அட்டவணையை ஐசிசி உருவாக்கியுள்ளது.

Icc

ஏனெனில் கடந்த கால அட்டவணையை காட்டிலும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையில் 22 டெஸ்ட், 40 ஒருநாள், 25 டி20 போட்டிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களை நிம்மதியடைய வைத்துள்ளது. அதே சமயம் 84, 94 போட்டிகளாக விரிவடையும் ஐபிஎல் தொடருக்கு ஏற்றவாறும் இந்த அட்டவணையில் இரண்டரை மாதம் இந்திய கிரிக்கெட்டுக்கு விடுப்பு கொடுக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின்படி 2023 – 2027 காலகட்டத்தில் உலகிலேயே அதிகபட்சமாக 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து வங்கதேசம் 150 போட்டிகளில் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்தியாவின் அட்டவணை:
அதற்கடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் 147 போட்டிகளிலும், இந்தியா 142 போட்டிகளிலும் இங்கிலாந்து 141 போட்டிகளிலும் நியூசிலாந்து 135 போட்டிகளிலும் ஆத்திரேலியா 132 போட்டிகளிலும் இலங்கை 131 போட்டியிலும் பாகிஸ்தான் 130 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் 123 போட்டிகளிலும் தென்னாபிரிக்கா 113 போட்டிகளிலும் அயர்லாந்து 110 போட்டிகளிலும் ஜிம்பாவே 109 போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்தத் தொடர்கள் அனைத்துமே 2023 – 2027 வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் அடிப்படை தொடராகும். இந்த அடிப்படை அட்டவணையில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும் டெஸ்ட் போட்டிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது.

IND vs WI India Champions

அதுபோக ஆசிய கோப்பைக்கும் டி20 உலகக்கோப்பைக்கும் இடையே ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா மோதுவது போல் திடீரென்று அந்தந்த நாட்டு வாரியங்கள் விரும்பி நடத்தப்படும் தொடர்களும் நடைபெற உள்ளது. சரி இந்த அடிப்படை அட்டவணையின்படி இந்தியா பங்கேற்கும் போட்டிகளைப் (பழைய அட்டவணையின் எஞ்சிய போட்டிகள் + புதிய அட்டவணையின் 141 போட்டிகள்) பற்றி பார்ப்போம்: (இந்த அட்டவணையில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா எந்த ஒரு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவில்லை)

- Advertisement -

காலண்டர் 2023:
1. ஜனவரியில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் மற்றும் இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள்
2. பிப்ரவரி மற்றும் மார்ச்சில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் – கவாஸ்கர் கோப்பை 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்
3. ஜூலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள்
4. செப்டம்பரில் ஆசிய கோப்பை மற்றும் நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் டிசம்பரில் 5 டி20 போட்டிகள். அக்டோபரில் சொந்த மண்ணில் ஐசிசி உலகக்கோப்பை
4. டிசம்பரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள்.

2024 காலண்டர்:
1. ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகள்
2. ஜூன் மாதம் டி உலக்கோப்பை மற்றும் ஜூலை மாதம் இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள்
3. செப்டம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள்
4. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் அக்டோபரில் 3 டெஸ்ட் போட்டிகள்
5. நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர்

- Advertisement -

2025 காலண்டர்:
1. ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள்
2. மார்ச் மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
3. ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் மற்றும் செப்டம்பரில் ஆசிய கோப்பை
4. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அக்டோபரில் சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள்
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபரில் அதனுடைய சொந்த மண்ணில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள்
6. நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள்.

IND vs ENG TEam INDIA

2026 காலண்டர்:
1. ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் மற்றும் டி20 உலகக்கோப்பை
2. ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 1 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்
3. ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள்
4. ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள்

- Advertisement -

Team India IND vs ENg

5. செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 3 டி20 போட்டிகள்
6. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக செப்டம்பரில் சொந்த மண்ணில் 3 ஒருநாள் 5 டி20 போட்டிகள்
7. அக்டோபரில் நியூசிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள்.
8. டிசம்பரில் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள்

இதையும் படிங்க:  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் – யார் புதிய கோச் தெரியுமா?

2027 ஜனவரியில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருடன் இந்த அட்டவணை முடிகிறது.

Advertisement