அடேங்கப்பா ரன்னருக்கே இத்தனை கோடியா.. ஐபிஎல் தொடரை ஓரம்கட்டி ஐசிசி வெளியிட்ட .. 2023 உ.கோ பரிசுத் தொகை பட்டியல் இதோ

ICC World Cup 2023
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவின் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. 1987, 1996, 2011 போன்ற வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடர் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பல்வேறு நகரங்களில் நடைபெற்று நவம்பர் 19ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

அதில் கோப்பையை வெல்வதற்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன. அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் கில்லியான செயல்பாடுகளை வெளிப்படுத்தக்கூடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்பதே இந்திய ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- Advertisement -

பரிசுத்தொகை பட்டியல்:
இந்நிலையில் தங்களுடைய நாட்டின் வெற்றிக்காக போராடும் அணிகளின் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் வகையில் இறுதியாக வழங்கப்பட உள்ள பரிசுத்தொகை பட்டியலின் விவரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன் படி தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு ஃபைனலில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வெற்றி கோப்பையுடன் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

1. இது இந்திய ரூபாயில் சுமார் 33.24 கோடிகளாகும். சமீப காலங்களாகவே ஐசிசி மற்றும் உலகக்கோப்பைகளை மிஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் 2023 சீசனில் கோப்பையை வென்ற எம்எஸ் தோனி தலைமையில் நடந்த சென்னை அணிக்கு 20 கோடி பரிசாக வழங்கப்பட்டது. தற்போது ஐபிஎல் தொடரை ஓரக்கட்டும் வகையில் ஐசிசி பெரிய பரிசுத்தொகையை அறிவித்துள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

2. அதே போல ஃபைனல் வரை வந்து போராடி தோல்வியை சந்திக்கப்போகும் அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது சுமாரா 16.62 கோடி ரூபாய்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. அது போக செமி ஃபைனலில் போராடி தோல்வியை சந்திக்கும் 2 அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாயில் 6.65 கோடிகள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: வீடியோ : நட்பு தான் முக்கியம்.. வங்கதேச – நியூஸிலாந்து வீரர்களை கட்டிப்பிடிக்க வைத்த மன்கட் அவுட்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

3. அத்துடன் லீக் சுற்றுடன் வெளியேறப் போகும் 6 அணிகளுக்கு ஆறுதல் பரிசாக 1 லட்சம் டாலர்கள் அதாவது 82.94 லட்சம் இந்திய ரூபாய் பரிசாக கொடுக்கப்பட உள்ளது. இது மட்டுமல்லாமல் லீக் சுற்றில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வெற்றிக்கும் அந்தந்த அணிகளுக்கு தலா 33.17 லட்சம் ஊக்க பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. அந்த வகையில் இத்தொடரின் பரிசுகள் ஐபிஎல் மற்றும் உலகின் அனைத்து இதர தொடர்களை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement