வரலாற்றில் முதல் முறையாக 8 நாடுகளில் நடைபெறும் 2024 டி20 உலக கோப்பை.. 10 மைதானங்கள் – தேதியை வெளியிட்ட ஐசிசி

T20 World Cup 2024
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2024 டி20 உலக கோப்பை அடுத்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் நடைபெற உள்ளது. கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த தொடரில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. அதைத்தொடர்ந்து அடுத்த டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெறும் என்று ஏற்கனவே ஐசிசி அறிவித்திருந்தது.

அதில் 2010க்குப்பின் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2வது முறையாக நடைபெறும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் இப்போது தான் நடைபெற உள்ளது. அதே போல அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கக் கூடிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் மாபெரும் போட்டி வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ளதாக பிரபல கிரிக்பஸ் இணையத்தில் செய்திகள் வெளியானது.

- Advertisement -

8 நாடுகளில்:
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை நடைபெறும் தேதிகள் மற்றும் மைதானங்கள் பற்றிய முக்கியமான அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன் படி 2024 ஐசிசி டி20 உலக கோப்பை வரும் 2024 ஜூன் மாதம் 4ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. அதை விட டி20 உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்த வருடம் 20 கிரிக்கெட் அணிகள் களமிறங்குகின்றன.

அதன் காரணமாக வழக்கத்தை விட அதிகமாக இத்தொடரின் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்க மொத்தம் 55 போட்டிகள் நடைபெற உள்ளதாக ஐசிசி கூறியுள்ளது. அதே காரணத்தால் இத்தொடர் 10 வெவ்வேறு மைதானங்களில் நடைபெறும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. அதாவது வெஸ்ட் இண்டீஸ் என்பது பல்வேறு தீவு நாடுகளை சேர்ந்த கூட்டமைப்பு என்பதை அனைவரும் அறிவோம்.

- Advertisement -

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் ஆன்ட்டிகுவா & பார்புடா, பார்படாஸ், கயானா, டாமினிக்கா, செயின்ட் லூசியா, ட்ரினிடாட் & டொபாகோ, செயின்ட் வின்சென்ட் & தி கிரேண்டின்ஸ் ஆகிய 7 வெவ்வேறு சிறிய நாடுகளில் உள்ள முதன்மை மைதானங்களில் இத்துடன் பெரும்பாலான போட்டிகள் நடைபெற உள்ளது. அது போக அமெரிக்க நாட்டில் டாலஸ், ஃப்ளோரிடா மற்றும் நியூயார்க் ஆகிய 3 நகரங்களில் இருக்கும் முதன்மையான மைதானங்களில் இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வீடியோ : நட்பு தான் முக்கியம்.. வங்கதேச – நியூஸிலாந்து வீரர்களை கட்டிப்பிடிக்க வைத்த மன்கட் அவுட்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

இருப்பினும் பொதுவாகவே 2 – 3 மட்டுமே ஐசிசி தொடரை இணைந்து நடத்துவது வழக்கமாகும். ஆனால் தற்போது வெஸ்ட் இண்டீசுடன் அமெரிக்காவும் சேர்ந்துள்ளதால் வரலாற்றிலேயே முதல் முறையாக 8 வெவ்வேறு நாடுகளில் உள்ள 10 வெவ்வேறு மைதானங்களில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

Advertisement