இந்தியா தாங்க டாப்பு.. 2023 ஆம் ஆண்டு உலககோப்பை நிகழ்த்திய வரலாற்று சாதனை – ஐ.சி.சி அறிவிப்பு

Worldcup
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஏழு வாரங்களை கடந்து நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் நிச்சயம் இந்திய அணியே வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த இந்த உலகக்கோப்பை தொடரானது உலக சாதனையை நிகழ்த்தியுள்ளதாக ஐசிசி தற்போது புதிய தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை நடைபெற்ற ஐசிசி தொடர்களிலேயே அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்த ஐசிசி தொடராக இந்த 2023-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரானது சாதனை நிகழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -

கடந்த 2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது அந்தத் தொடரினை மொத்தமாக 1.016 மில்லியன் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்ததாக குறிப்பிட்டுள்ளனர். அதாவது அந்த உலககோப்பையை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் வந்து பார்த்ததே சாதனையாக இருந்தது.

இதையும் படிங்க : கிரௌண்ட்க்கு போனா அதை மட்டும் பாக்க மாட்டேன்.. தனது வெற்றிகரமான பவுலிங்கின் பின்னணியை பகிர்ந்த ஷமி

இந்நிலையில் இந்தியாவில் 45 நாட்கள் நடைபெற்ற இந்த தொடரினை 12 லட்சத்து 50 ஆயிரத்து 307 ரசிகர்கள் மைதானத்திற்கு நேரில் வந்து கண்டு களித்ததாக குறிப்பிட்ட ஐசிசி இதுவே அதிக ரசிகர்கள் நேரில் கண்டு களித்த ஐ.சி.சி தொடராக உலக சாதனை நிகழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement