எவ்ளோ போராடினோம்.. கடைசில இப்படி நடந்ததில் கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு – ஆப்கனிஸ்தான் கேப்டன் வருத்தம்

Ibrahim
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இப்ராஹிம் ஜாட்ரான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது இங்கு நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான அணி ஏற்கனவே இரண்டு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்திய அணியிடம் இந்த தொடரை இழந்திருந்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று பெங்களூரு நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 212 ரன்களை குவித்தும் விடாப்பிடியாக அதனை துரத்திய ஆப்கானிஸ்தான் அணியும் 212 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்ததால் இரண்டாவது சூப்பர் ஓவரும் நடைபெற்றது. அப்படி நடைபெற்ற அந்த இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னாயின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக இறுதியாக ஆப்கானிஸ்தான் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த பரபரப்பான போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராஹிம் ஜாட்ரான் கூறுகையில் : ஒட்டுமொத்தமாகவே இந்த போட்டி மிகச் சிறப்பாக இருந்தது. நாங்கள் இந்த போட்டியில் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம்.

- Advertisement -

இருப்பினும் இறுதியில் சூப்பர் ஓவரில் வந்து நாங்கள் தோல்வியை சந்தித்தது சற்று வருத்தமளிக்கிறது. இருந்தாலும் இந்த தொடரின் மூலம் கிடைத்த அனுபவங்களை அப்படியே டி20 உலக கோப்பை தொடருக்கு கொண்டு செல்ல உதவும் என்று கருதுகிறேன்.

இதையும் படிங்க : வாழ்க்கைல புதுசா சாதிச்சுருக்கேன்.. இன்னும் அதுல முன்னேறணும்.. ஆப்கானிஸ்தான் தொடர்நாயகன் துபே

இது போன்ற ஒரு டி20 தொடரை நாங்கள் விளையாடியது இல்லை. இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக நாங்கள் நல்ல முறையில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் ஜாட்ரான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement