வாழ்க்கைல புதுசா சாதிச்சுருக்கேன்.. இன்னும் அதுல முன்னேறணும்.. ஆப்கானிஸ்தான் தொடர்நாயகன் துபே

Shivam Dube Press
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலையில் ஜனவரி 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற சம்பிரதாய கடைசிப் போட்டியிலும் இரட்டை சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானின் தோற்கடித்த இந்தியா 3 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்று அசத்தியது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஒரு கட்டத்தில் 22/4 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. இருப்பினும் அப்போது கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 129* ரன்களும் ரிங்கு சிங் 69* ரன்களும் அடித்ததால் 213 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த ஆப்கானிஸ்தான் குர்பாஸ் 50, இப்ராஹிம் ஜாட்ரான் 50, குல்பதின் 55* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 212 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது.

- Advertisement -

புதிய சாதனை:
அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் சமனில் முடிந்த நிலையில் மீண்டும் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடிய உதவியுடன் இந்தியா 11 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரவி பிஸ்னோய் 2 விக்கெட்களை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

இந்த வெற்றிக்கு கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். அதை விட 3 போட்டிகளிலும் சேர்த்து 124 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய சிவம் துபே தொடர் நாயகன் விருது வென்றார். 2019இல் அறிமுகமாகி சுமாராக செயல்பட்ட அவர் 2023 ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாரமாக விளையாடி ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் இந்திய அணியில் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

அந்த வாய்ப்பில் சீனியர் அணியில் முதல் தொடரிலேயே தொடர் நாயகன் விருது வென்றுள்ள அவர் அது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆல் ரவுண்டராக நீங்கள் எப்போதும் தொடர் நாயகன் விருது வெல்வதை விரும்புவீர்கள். இந்த விருது என்னுடைய வாழ்வில் புதிய சாதனையாக வென்றுள்ளேன். இது நல்ல உணர்வை கொடுக்கிறது”

இதையும் படிங்க: ரிங்கு சிங் கிட்ட நான் சொன்னது இந்த ஒரு விஷயம் மட்டும் தான்.. இப்படி நடக்கும்னு நினைக்கல – ரோஹித் சர்மா மகிழ்ச்சி

“நாங்கள் இந்த மைதானத்தில் நிறைய ரன்கள் அடித்தோம். சூப்பர் ஓவருக்கு முன்பாகவே நாங்கள் வெல்வோம் என்று நினைத்தோம். ஆனால் இது போன்ற கிரிக்கெட்டில் 2 அணிகளும் சிறப்பாக விளையாடின. இப்போதும் என்னுடைய ஆட்டத்தில் நிறைய முன்னேற்றங்களை நான் காண வேண்டும். குறிப்பாக என்னுடைய பந்து வீச்சில் முன்னேற வேண்டும். அதை ஒவ்வொரு போட்டியிலும் நான் முன்னேற்ற முயற்சிப்பேன்” என்று கூறினார்.

Advertisement