- Advertisement -
உலக கிரிக்கெட்

பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு இந்தியாவை பகைச்சுகிட்டதே காரணம்.. எங்கேயும் ஜெய்க்க முடியல.. இயன் ஸ்மித் பேட்டி

சர்வதேச கிரிக்கெட்டில் 1992 உலக சாம்பியன் பாகிஸ்தான் தற்சமயத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2017 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் 2021 டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் வென்றது. அந்த 2 வெற்றிகளே கடந்த தசாப்தத்தில் பாகிஸ்தான் பதிவு செய்த குறிப்பிடத்தக்க வெற்றிகளாகும். அதைத் தவிர்த்து இந்தியாவிற்கு எதிராக விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது.

மேலும் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் சமீபத்திய ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. அது போக கடந்த வருடம் மற்றொரு பலவீனமான அணியான வங்கதேசத்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் அவமானத் தோல்வியை சந்தித்தது. அப்படியே 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாமல் பாகிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

இந்தியாவுக்கு பகை:

அதனால் சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாத அணி என்ற கென்யா, ஸ்காட்லாந்தின் உலகச் சாதனையை பாகிஸ்தான் சமன் செய்தது. அடுத்து நடைபெறும் நியூசிலாந்து டி20 தொடரிலும் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மோசமாக தோற்றது. இந்நிலையில் இந்தியாவுடன் பகைத்துக் கொண்டதே பாகிஸ்தானின் இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் இயன் ஸ்மித் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்தியாவின் ஐபிஎல் தொடரில் விளையாட தடை பெற்றதே பாகிஸ்தான் நவீன கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் வளர்ச்சியடாமல் நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி அங்குள்ள செல்வங்களை சம்பாதிக்க முடியவில்லை. சொல்லப்போனால் மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் உள்ள அணிகளையும் இந்தியாவை சேர்ந்தவர்களே நிர்வகிக்கிறார்கள்”

- Advertisement -

ஸ்மித் கருத்து:

“எனவே பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மேடு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய வாரியம், நிர்வாகிகள், தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன. அவர்கள் தொடர்ச்சியாக ஒரு கேப்டனுக்கு வாய்ப்புகளை வழங்குவதில்லை. உலக அரங்கில் கொடுக்கப்படும் வாய்ப்பில் அசத்துவதே பாகிஸ்தான் மீண்டும் தங்களது அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வழியாகும்”

இதையும் படிங்க: பழசை விடுங்க இதை ஃபாலோ பண்ணுங்க.. உம்ரான் கம்பேக் கொடுக்க கபில் தேவ் அறிவுரையை சொன்ன ஸ்ரீசாந்த்

“எடுத்துக்காட்டாக இந்த டி20 கிரிக்கெட் தொடரை சொல்லலாம். ஆனால் நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் எந்தத் தொடர்களிலும் வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் அவர்களிடம் தென்படவில்லை” என்று கூறினார். முன்னதாக நியூஸிலாந்து தொடரில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற நட்சத்திர வீரர்கள் கழற்றி விடப்பட்டு சல்மான் ஆகா தலைமையில் இளம் வீரர்களுடன் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. ஆனால் அந்த வீரர்களும் பாகிஸ்தானுக்கு ஏமாற்றத்தையே கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -