- Advertisement -
ஐ.பி.எல்

ஐபிஎல் ஓனர்களை இப்படியே விட்டா அதை மாத்திடுவாங்க.. வெளிநாட்டு வாரியங்களை எச்சரித்த இயன் சேப்பல்

கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் எனும் சாதாரண டி20 தொடரை பிசிசிஐ தொடங்கியது. ஆனால் 17 வருடங்கள் கழித்து அது சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏனெனில் உலகக் கோப்பைக்கு நிகராக தரமான போட்டிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரால் பிசிசிஐ ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானமாக சம்பாதிக்கிறது.

அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதே போல ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கிய உரிமையாளர்களும் தற்போது பன்மடங்கு வளர்ந்துள்ளனர். அதனால் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, தென்னாபிரிக்கா, அமீரகம் போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தங்களுடைய கிளை அணிகளை வாங்கியுள்ளனர்.

- Advertisement -

ஐபிஎல் ஓனர்கள்:
அந்த வரிசையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் ஹண்ட்ரட் தொடரில் சௌதர்ன் பிரேவ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணி வாங்க உள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. இந்நிலையில் இப்படி ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களை வளரவிட்டால் வருங்காலங்களில் வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட டி20 கிரிக்கெட்டில் விளையாட அதிகம் முன்னுரிமை கொடுப்பார்கள் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சேப்பல் எச்சரித்துள்ளார்.

எனவே வெளிநாட்டு வாரியங்கள் இதை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஈஎஸ்பிஎன் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் உரிமையாளர்கள் ஏற்கனவே அமீரகம், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் விளையாடும் டி20 அணிகளில் அதிக பங்குகளை வைத்திருக்கிறார்கள்”

- Advertisement -

“அதனால் இந்த விளையாட்டை நடத்துவதில் அவர்கள் அதிக பங்கு வகிக்கும் போக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. புத்திசாலித்தனமான உரிமையாளர்கள் சிறந்த தரவரிசை வீரர்களை நீண்ட ஒப்பந்தங்களில் தங்களுக்காக விளையாட கையெழுத்திட தொடங்கியுள்ளனர். இது கிரிக்கெட் நிர்வாகங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் வீரர்கள் தங்களுடைய நாட்டு வாரியத்தை விட ஐபிஎல் உரிமையாளர்களிடம் ஈடுபாட்டில் இருக்கக்கூடும்”

இதையும் படிங்க: நேர்மையா போராடுன வினேஷ் போகத்துக்கு அட்லீஸ்ட் இதையாச்சும் கொடுங்க.. ஒலிம்பிக் கமிட்டிக்கு கங்குலி கோரிக்கை

“பெரும்பாலான நாடுகளில் விளையாட்டுக்கு பணம் தேவைப்படும் நிலையில் ஐபிஎல் உரிமையாளர்களிடம் அதிகமான நிதி இருக்கிறது. அதனால் இப்படி நடப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இங்கே கடந்த சில தசாப்தத்துக்கு முன்பாகவே விளையாட்டுக்கான நீண்ட கால வரைபடத்தை அந்தந்த நாட்டு வாரியங்கள் உருவாக்கத் தவறியதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை சமாளிக்க அவர்கள் குறைந்தபட்ச திட்டத்தை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் வருங்காலத்தில் இந்த விளையாட்டு முழுக்க முழுக்க பணக்கார உரிமையாளர்களால் நடத்தப்படும் டி20 ஆட்டமாக மாறிவிடலாம்” என்று கூறினார்.

- Advertisement -