இந்திய அணி அவரை டீம்ல எடுக்காம ரொம்ப பெரிய முட்டாள் தனம் பண்ணிட்டாங்க – இயான் சேப்பல் விளாசல்

Chappell
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள நான்கு ஆட்டங்களில் மூன்று வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்று தற்போது குரூப் இரண்டின் புள்ளி பட்டியலில் முதலிடத்தை வகிப்பதோடு கிட்டத்தட்ட அரையிறுதிக்கான வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது. இந்திய அணி அடுத்ததாக விளையாட இருக்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்றால் எளிதாக அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறிவிடும்.

Arshdeep Singh 1

- Advertisement -

என்னதான் இந்த டி20 தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் ஆங்காங்கே சில பலவீனங்கள் இந்திய அணியில் காணப்படுகிறது. அதோடு அணித்தேர்விலும் ஒரு சில குறைகள் இருப்பதாக ஏற்கனவே பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இயான் சேப்பலும் இந்திய அணி செய்துள்ள ஒரு தவறு மிகப்பெரிய முட்டாள்தனம் என்று தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்த டி20 உலக கோப்பை தொடரின் பிளேயிங் லெவனில் தினேஷ் கார்த்திக்கை எடுத்தது ஒரு முட்டாள்தனம். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அனைத்து போட்டியிலும் விளையாடி இருக்க வேண்டும். ஒருவேளை தினேஷ் கார்த்திக் மற்றும் ராகுல் ஆகியோரை நீக்காவிட்டாலும் ஒரு சில ஓவர்களை மட்டுமே வீசும் அக்சர் பட்டேலை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்.

DK and Pant

ஏனெனில் ஆஸ்திரேலியா போன்ற பெரிய ஆடுகளங்களில் ஏற்கனவே அதிரடியாக விளையாடி மேட்ச் வின்னராக தன்னை நிரூபித்துள்ள ரிஷப் பண்டினை பிளேயிங் லெவனில் விளையாட வைத்திருக்க வேண்டும். அவரது அதிரடியான ஆட்டம் நிச்சயம் இந்திய அணிக்கு பலத்தை சேர்த்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

இந்தியாவில் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிவிட்டார் என்று அவரை ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கும் இந்த தொடரில் தேர்வு செய்ததெல்லாம் சரியான முடிவு கிடையாது. என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலியா மைதானத்திலும் 150 கிலோமீட்டர் வேகத்தை சமாளித்து மிகச் சிறப்பான ஆட்டத்தை கடந்த காலங்களில் அளித்த ரிஷப் பண்டிற்கு தான் வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க : டி20 வேர்ல்டுகப் : ஆஸ்திரேலியா இனியும் செமி பைனல் போகனும்னா – இந்த ஒரு வழி மட்டும் தான் இருக்கு

ரிஷப் பண்ட் ஒரு நிகழ்கால சூப்பர் ஸ்டார் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளார். மேலும் அவர் ஒரு அதிரடியான இடது கை ஆட்டக்காரர் என்பதனால் நிச்சயம் அவர் எதிர்காலத்திலும் இன்னும் சிறப்பாக செயல்படுவார் என தான் நம்புவதாக இயான் சேப்பல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement