டி20 வேர்ல்டுகப் : ஆஸ்திரேலியா இனியும் செமி பைனல் போகனும்னா – இந்த ஒரு வழி மட்டும் தான் இருக்கு

AUS
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கிய எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. ஏற்கனவே தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் இன்னும் சில தினங்களில் அரையிறுதி போட்டிகளில் மோதப் போகும் நான்கு அணிகள் எவை என்பது தெரிந்துவிடும். அந்த வகையில் 12 அணிகள் இந்த சூப்பர் 12 சுற்றில் பங்கேற்று ஒவ்வொரு பிரிவிலும் தலா 6 அணிகள் மோதி வருகின்றன.

AUs vs AFG

- Advertisement -

இந்த பிரிவுகளில் குரூப் 1-ல் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து அணி ஏற்கனவே 7 புள்ளிகளுடன் அரை இறுதி வாய்ப்பினை உறுதி செய்து விட்டது. அதேவேளையில் இந்த குரூப் ஒன்றில் இரண்டாவது இடத்தினை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறப்போகும் அணி எது என்பது நாளை தெரிந்து விடும்.

அதே வேளையில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்த சூப்பர் 12 சுற்றில் இதுவரை தாங்கள் விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு ரத்து என 7 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் வகித்தாலும் நாளை இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான முக்கியமான போட்டியின் முடிவினை பொறுத்துதான் ஆஸ்திரேலியாவின் தலையெழுத்தே உள்ளது என்றால் அது மிகையல்ல.

AUS

அந்த முக்கியமான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும். அதே வேளையில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் இலங்கையை விட இங்கிலாந்து பலமான அணி என்பதனால் ஆஸ்திரேலியாவிற்கு இது சற்று கடினமான ஒன்று என்றே கூறலாம்.

- Advertisement -

ஒருவேளை இப்படி ரிசல்ட் பொறுத்து அமையாமல் நேரடியாக ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு செல்லவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு வருண பகவான் தான் வழிகாட்ட வேண்டும் என்பதே ஆஸ்திரேலிய ரசிகர்களின் நினைப்பாக இருக்கும். அந்த வகையில் அடுத்ததாக இங்கிலாந்து மற்றும் ஸ்ரீலங்கா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள போட்டியின் போது மழை மட்டும் பெய்து புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டால் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 12 சுற்றோடு வெளியேறும்.

இதையும் படிங்க : ஒரு ஓவருக்கு 5 பால் தானா? உலகக்கோப்பையில் அம்பயர்கள் செய்த மெகா தவறு – கலாய்க்கும் ரசிகர்கள்

அதே வேளையில் இங்கிலாந்து – இலங்கை போட்டி மழையால் ரத்தானால் ஆஸ்திரேலிய அணியானது நேரடியாக நியூசிலாந்து அணியுடன் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு செல்ல மழையோ அல்லது இங்கிலாந்தின் தோல்வியோ நடந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இல்லையெனில் நடப்பு சாம்பியனான அவர்கள் சூப்பர் 12 சுற்றோடு வெளியேறுவது உறுதி.

Advertisement