சகாப்தத்தின் லெஜெண்ட்.. ஸ்மித் – விராட் கோலி ஆகியோரில் யார் பெஸ்ட்? இயன் சேப்பல் கருத்து

- Advertisement -

இந்தியாவின் அகமதாபாத் நகரில் நவம்பர் 19ஆம் தேதி ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளன. அப்போட்டியில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி 6வது கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்காக களமிறங்குகிறது.

மறுபுறம் சொந்த மண்ணில் இதுவரை தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா 2011 போல கோப்பையை முத்தமிட்டு ரசிகர்களின் நீண்ட கால கனவை நிஜமாக்குவதற்காக போராட உள்ளது. இந்த போட்டியில் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பான விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலியா பேட்டிங் துறையின் முதுகெலும்பான ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரில் சிறப்பாக செயல்படப்போவது யார் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கிறது.

- Advertisement -

இயன் சேப்பல் பாராட்டு:
இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரராக இருக்கும் நிலையில் விராட் கோலி இந்த சகாப்தத்தின் சிறந்த வீரராக இருப்பதாக முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த ஒப்பீட்டில் முதலில் விராட் கோலியை பற்றி பேசுவோம். 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50க்கும் மேல் சராசரியை வைத்துள்ள அவர் அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்”

“சொல்லப்போனால் இந்த சகாப்தத்தின் சிறந்த வீரராக விராட் கோலி இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருடைய அணுகுமுறை எனக்கு பிடிக்கும். மேலும் பேட்டிங் பற்றி அவருடைய பேட்டியை சமீபத்தில் பார்த்தேன். அதில் அவர் பேட்டிங் சம்பந்தமாக சிறந்த அணுகுமுறையை வைத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன். மற்றொன்று அவரின் பிட்னஸ் ஆகும். 36 வயதிலும் அவர் ரன்கள் எடுப்பதற்காக எப்படி ஓடுகிறார் என்று பாருங்கள்”

- Advertisement -

“ஸ்மித் இத்தொடரில் பெரிய அளவில் அசத்தாத போதிலும் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் மற்ற வீரர்களை விட சுழலை சிறப்பாக எதிர்கொள்ளும் அவர் ஃபைனலில் முக்கியமான வீரர். அவர் தம்முடைய ஸ்டைலில் விளையாட முயற்சிப்பது முக்கியமாகும். இருப்பினும் ஃபைனலில் என்னை பொறுத்த வரை டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடுவது ஆஸ்திரேலியாலின் வெற்றிக்கு அவசியமாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இங்கேயும் பாகிஸ்தானுக்கு நேர்ந்த பரிதாபம்.. கபில் முதல் தோனி வரை முன்னாள் கேப்டன்களை கெளரவிக்கும் பிசிசிஐ

அவர் கூறுவது போல ஸ்டீவ் ஸ்மித் பெரும்பாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே அசத்தி வருகிறார். ஆனால் விராட் கோலி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் ஆரம்பகாலம் முதலே தொடர்ந்து அசத்தி வருகிறார். அதனாலேயே அவரை கிங் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டி வருவது குறிப்பிடப்பட்டது.

Advertisement