அவருக்கான மாற்று வீரரே இல்ல, டாப் ஆர்டர் அடிச்சா தான் ஜெயிக்க முடியும் – ஆஸி தொடரில் இந்தியாவை எச்சரிக்கும் இயன் சேப்பல்

Chappell
- Advertisement -

வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. மறுபுறம் ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால் பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் தோல்வியை பரிசளித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் தொடரை வெல்லப் போராட உள்ளது.

Steve Smith Virat Kohli IND vs AUS

- Advertisement -

இருப்பினும் சமீப காலங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தெறிக்க விட்ட இந்தியா 2012க்குப்பின் எப்போதுமே சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை என்பதால் இம்முறையும் வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெறும் என்று இந்திய ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். முன்னதாக இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயத்தால் இடம் பெறாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

மாற்று வீரர் கிடையாது:
ஏனெனில் என்னதான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் தோனியையும் மிஞ்சி சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்துள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் மறக்க முடியாத காபா வெற்றியின் நாயகனாக செயல்பட்டு வரலாற்றின் மிகச்சிறந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

Rishabh-Pant

மேலும் மெதுவாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடக்கூடிய அவர் ஒரு சில மணி நேரங்களில் போட்டியை இந்தியாவின் பக்கம் மாற்றக்கூடிய கருப்பு குதிரையாகவும் கருதப்படுகிறார். இந்நிலையில் இஷான் கிசான், கேஎஸ் பரத் போன்ற வீரர்கள் விளையாடினாலும் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர் இந்திய அணியில் இல்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சேப்பல் கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக மிடில் ஆர்டரில் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி ரன்களை குவிக்கக்கூடிய அவர் இல்லாத நிலைமையில் விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான் ஆஸ்திரேலிய தொடரில் அந்த வேலையை செய்ய வேண்டும் என்றும் இந்திய அணியை இயன் சேப்பல் எச்சரித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Chappell

“இத்தொடரில் இந்தியாவும் ஒரு சில இடங்களில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறிப்பாக ரிஷப் பண்ட்டுக்கு பதில் சிறந்த மாற்று வீரர் யார் என்பதில் அவர்களுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் இல்லாததால் இந்தியா இழக்கும் முக்கிய விஷயம் அவரது போர் குணமிக்க ஆக்ரோஷத்தால் வரக்கூடிய அதிரடியான ரன் ரேட் ஆகும். பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்குவதில் ரிஷப் பண்ட் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எனவே இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படுவதுடன் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டையும் ரன் ரேட்டையும் பராமரிக்க வேண்டும்”

- Advertisement -

“மேலும் நேதன் லயனுக்கு எதிராக எப்படி செயல்பட போகிறோம் என்பதில் மனதளவில் திடத்துடன் இருப்பது ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா போன்ற இந்திய வீரர்களுக்கு இத்தொடரில் காத்திருக்கும் மிகப்பெரிய சவாலாகும். ஒருவேளை நேதன் லயன் சீரான இடைவெளிகளில் சரியான ரேட்டில் விக்கெட்டுகளை எடுக்காமல் போனால் ஆஸ்திரேலியா தங்களது வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: எல்லாரும் தோனியாகிட முடியாது, சச்சினே 5 டைம் தோத்துட்டாரு – விராட், ரோஹித் விமர்சனங்களுக்கு அஷ்வின் பதிலடி

அவர் கூறுவது போல் விராட் கோலி, புஜாரா ஆகியோர் பெரிய ரன்களை எடுத்தாலும் ரிஷப் பண்ட் போல டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவிப்பவர்களாக இருப்பதில்லை. எனவே இந்தியாவின் வெற்றிக்கு ரிஷப் பண்ட் இடத்தை நிரப்பும் அளவுக்கு இதர பேட்ஸ்மேன்கள் சேர்ந்து சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது.

Advertisement